பக்கம்:இலக்கியத் தூதர்கள்- பாலூர் கண்ணப்பமுதலியார்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

தா தன். அவர் கூறி அனுப்பிய மொழியினை உனக் குக் கூறவே ஈண்டு வந்தனர். அவரைச் சாதாரண (மான வரி என்று கருதிவிடாதே,, அவர் புவிக்கு நாயகர்; தெய்வ நாயகர்; நீ கூறும் வேதநாயகர், விதிக்கும் நாயகர்” என்று இராமருடைய பெருமை களை அடுக்கிக் கூறினான்,

இப்படி அங்கதன் அடுக்கி அறைந்திட்ட மொழிகளைக் கேட்ட இராவணன் நகைத்து “குரங்குகளைக் கூட்டிக் கொண்டு சேதுகட்டி, உன்னை இங்கு அனுப்பிய நரனையா, நீ உலக நாதன் என்று கூறினை ? நன்று நன்று உன் வார்த் தைகள். எனது திருமுன் மும்மூர்த்திகளும் வர அஞ்சுவர், அவ்வாறு இருக்க, நீ ஒரு மனிதன், பொருட்டு அஞ்சாது என் முன் வந்துற்றனை. ஆக நீ யாவன்? உன் வரலாற்றைக் கூறுக" என்று அதட்டிக் கேட்டனன்,

அங்கதன் ஒரு குறும்புக்காரன். இராவணன் கொட்டம் அடங்க எப்படித் தன்னைப் பற்றிக் கூறினால் நன்கு அமையும் என்று சிந்தித்து நேரே தான் வாலியின் மகன் அங்கதன் என்று கூறாமல், “இராவணன் என்பவனைத் தன் வாலில் கட்டி மலைகள் பல தாவிச் சென்றவனும், தேவர்கள் அமுதம் உண்ணத் திருப்பாற்கடலைக் கடையப் பெருந்துணையாய் இருந்தவனும் ஆகிய வாலி என் 4 .ானுடைய மகன், யான்" என்றனன்.

அங்கதன் இவ்வாறு சொல்லக் கேட்ட" இரா வணன் கோபம் தணிந்தவனாய், “ஆ! அப்படியா?