30
அவர் கட்கு அழிவு ஏற்படப் போகிறதே என்ற கார் Kணத்தால் அன்றோ , உன் தம்பியாகிய விபீடணன் எங்கள் தலைவராம் இராமரைச் சரண் புகுந்தனன் உன் பேச்சு வன்மையால் என்னை உன் வசம் படுத்தப் பார்க்கின்றனை போலும்! தூதுவராக வந்தி வர், தூதர் கடமையினை ஆற்றாது, அரசை ஏற்பது அறன் ஆகுமா? அதுவும், நீ கொடுக்க யானா அரசு 'பெறுவேன்? நீ கொடுக்க யான் பெறுவது, நாய் கொடுக்கும் அரசை சிங்கம் பெறுவது போன்ற தாகும்" என்று கூறிச் சிரித்தான்.
அங்கதன் தன்னைச் சிறிதும் மதியாது' கூறும் மொழிகளைக் கேட்டு, அடங்காச் சினமுற்றவனாய் “சரி, நீ வந்த காரியம் என்ன?" என்று கேட்டனன் அப்போது அங்கதன், “இலங்கை வேந்த! என்னைத் கருணை வள்ளல் அழைத்து உன்பால் சென்று வகு மாறு பணித்துத் 'தேவியை விடுக, அன்றிப் போருக்கு வருக' என்பதை அறிவிக்கக் கூறினன் இரண்டில் எதைச் செய்ய விருப்பம் உளது ) உள்ளக் கிடக்கையை ஒளியாது நன்கு சிந்தித்து உரைக்க. ஆனால், உன்பால் வைத்த இரக்கம் காரணம் மாக உனக்கு ஒன்று கூறுவல் கேட்டி, உனக்கு நன்மையாவது சீதையை சிறை நீக்கம் செய்து இராமரை வணங்கி உன் சுற்றத்துடன் நல்வாழ்வு நடத்துவதேயாகும். இவ்வாறு செய்யாது போர் இடத் துணிந்தாயாயின் போருக்குப் புறப்படுக' என்றனன்,
இந்தவாறு கூறக் கேட்ட இராவணன் கோபங் கொண்டு, “இவனைப் பிடியுங்கள் ; கட்டுங்