பக்கம்:இலக்கியத் தூதர்கள்- பாலூர் கண்ணப்பமுதலியார்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33

அனர். இந்தக் கருத்துக்குத் திருமால், பிரமன் முதலி யார்களும் ஒவ்வினர்.

பின்னர்க் குமாரக் கடவுள் வீரவாகுவிடம் “வீர வா கு! மகேந்திரம் சென்று, சூரபதுமனைக் கண்டு, இந்திரன் மகனான சயந்திரனையும், மற்றும் உள்ள வர்களையும் சிறை நீக்கச் செய்யுமாறு செப்புக.

கலைச் செய்ய அவன் மறுத்தால், 'நாளையே போருக்கு ஆயத்தமாக இருக்கும்படி கூறிவிட்டு வருக" என்று கூறி அனுப்பினர்.

வீரவாகு தேவரும் குமாரக் கடவுளை வணங்கி வீர மகேந்திரம் செல்லப் புறப்பட்டார். புறப்பட்ட வர் கந்தமாதனப் பருவதம் வந்துற்றார். அங்கிருந்து இடையே கிடந்த கடலினைத் தாவி மகேந்திர புரியினை அடைந்தனர். அடைந்தவர் சூரபதுமனது நகர் வளம் நாட்டு வளம் கண்டு, இந்திரன் மகன் ரயபந்தன் சிறைப்பட்டுக் கிடந்த இடத்தை அணுகி, அவனைத் தேற்றி, விரைவில் முருகப் பெருமான் உன் னையும் தேவர்களையும் சிறை நீக்கம் செய்வார். wருந்திற்க" என்று உறுதி கூறிச் சூரபதுமன் சபை u?ன அணுகினர்.

சூரபதுமன் சிங்காதனத்தில் சிறக்க வீற்றிருந் தன ன், தேவமாதர் ஆலவட்டம் வீசிக் கொண்டிருந் தனர். அசுரர் அடைப்பை (வெற்றிலை, பாக்கு முதலி 16 Jான நிறைந்த பை) தாங்கி நின்றனர். நடன மாதர் நடனமாடிக் கொண்டிருந்தனர். இசைக்கருவிகளில் இசைவாணர் இசையினை இசைத்துக் கொண்டிருந் நன். இந்த நிலையில் இன்புடன் இருந்த சூரபதுமன்