38.
4.0p வந்த அசுரர்களைத் தம் கையால் பிடித்துச் சூரபதுமன் வீற்றிருந்த சபையிலேயே தரையில் மொ தினர், அவர்களுள் சில்லோரின் மார்புகள் முடிந்தன. அவற்றினின்று இரத்தம் பீறிட்டது. உயிரும் போயது.
இந்த நிலையில் வீரவாகு தேவர் சூரபதுமனை (நோக்கி, “'அசுரர் தலைவ! இனி நீ பிழைத்தல் அரிது. எம் குமாரப் பெருமானது கூரிய வேல் உன் மார்பைக் குத்திப் பிளந்தே தீரும். இது திண் ணம். பொய் ஆகாது. அதற்குமுன் நீ துய்க்க வேண்டிய அனைத்தையும் ஆசை தீரத் துய்த் து விடு. நான் விடைபெற்றுக் கொள்கிறேன் " என்று கூறி எழுந்தனர். "இவர்க்கு இறைவனால் கொடுக்கப் பட்ட தவிசும் மறைந்தது.
சூரபதுமன் சீற்றத்தின்மேல் சீற்றம் கொண்ட வனாய், வீரவாகு தேவரைச் சிறையிடச் சதுமுகன் என்பானை ஏவினன். அவன் வீரவாகு தேவரை நெருங்கிப் பிடித்தபோது அவர் அ வ ன யு ம் கொன்றார். மற்றும் பலரையும் அழித்து அதன்பின் சூரபதுமனது நகரத்தையும் பாழ்படுத்தினர்.
வீரவாகு தேவர் தம் வன்மையினை வீர மகேந் திர புரியில் காட்டி மீண்டும் கடலைக் கடந்து செந் தில் மாநகர்ச் சேர்ந்து செவ்வேள் பரமன் சேவடி. வணங்கினர். குமாரக் கடவுள் வீரவாகு தேவரைப் புன்னகை கொண்டு வரவேற்று, ""சென்ற காரியம் u பாதாயிற்று?” என்று வினவினார்.