கருத்தினை அவரிடம் கழறுங்கள். எனது பணிவான வணக்கத்தினை வீடுமருக்கும் (பீஷ்மருக்கும்), விதுர் ருக்கும், துரோணாச்சாரியாருக்கும் அறிவியுங்கள்” என்று சொல்லி அனுப்பினார்.
உலூகமா முனிவர் முரசக் கொடியோராகிய தருமர் விரும்பியபடி, அரவக்கொடியோனாம் துரியன் அரசு புரியும் அத்தினாபுரிக்குச் சென்றார். திருத ராட்டிரரும் உடன் இருந்த துரியன் சபையினை அணு கினர். வந்தவர் முனிவர் ஆதலின், துரியோதனன் தன்முறையில் அவரை வரவேற்று, திருவடிகளை வணங்கி ஆதனம் அமர்த்தி, அதில் அமர வேண்டி னான். முனிவரும் அதில் அமர்ந்த னர். வீடுமர், விது ரர் முதலியவர்களும் உளம் கலந்த அன்புடன் உலூ கர்க்கு வணக்கம் செய்தனர். அதன் பின் அங்கு இருந்தவர்கள் முனிவர் வந்த காரணத்தினை வினா வத் தொடங்கினர்.
உலூகமா முனிவர் தருமர் கூறியனுப்பியபடி முதலில் வீடுமர், விதுரர், துரோணர் முதலியோர்க் குத் தருமர் வணக்கம் கூறச் சொன்னதைக் கூறிப் பின்னர்த் திருதராட்டிரர், துரியன், கன்னன், சகுனி ஆகியோர் மனம் வேகும் வண்ணம் தாம் வந்த காரணத்தைக் கழறத் தொடங்கினார் :
“துரியோதனாதியர்களே, பஞ்ச பாண்டவர் உம் முடன் சூதாடி நாடு நகரங்களைத் தோற்றனர். பின்னர் உம் கட்டளைப்படி பன்னிரண்டு ஆண்டு கள் காட்டில் வாழ்ந்து, அதன் பின் ஓர் ஆண்டு எவரும் அறியா வண்ணம் மறைந்து இருந்து இப் போது வெளிப்பட்டு வந்துள்ளனர். இவ்வாறு