பக்கம்:இலக்கியத் தூதர்கள்- பாலூர் கண்ணப்பமுதலியார்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

இந்தவாறு பாம்புக் கொடியோன் பகர்ந்ததைக் கேட்ட வில்விதுரர் துரியனை நோக்கி, “'துரியா, அவசரப்பட்டு அறையாதே. முனிவர் கூறியபடி நாட்டினை அவர்கட்குத் தந்து விடு, அப்படித் தராமல் இழிசினர் மொழிகளைக் கேட்டு நடப் பாயானால் திருமகள் உன்னை விட்டு விலகு வதோடு அல்லாமல், நம் சுற்றமும் சேனையும் அழியும்” என்று அன்புடன் எடுத்துக் கூறினர்.

பிறகு துரோணாசாரியாரும், கிருபாசாரியாரும் துரியனைப் பார்த்து, "'துரியா, நீ முன் சொன்ன வாக்குப்படி அப் பஞ்ச பாண்டவர்கட்கு நாட்டை அளித்து விடும். இதுதான் அறம். இவ்வாறு செய் யாமல் படை திரட்டிப் போருக்கு ஆயத்தம் ஆதல் பெரும் பிழையாகும். முனிவர் கூறியபடி. அர்ச்சு னன் தன் வில்லை வளைத்துச் சமர் செய்ய முன் நிற் பானாகில், அவன் முன் எந்த வில்லி எதிர் நிற்க இய லும்? என்று கூறினர்.

வீடுமரும் திருதராட்டிரரைப் பார்த்து, “'திருத மராட்டி.ரா! உன் இளவலான பாண்டுவின் குமாரர் களான பஞ்ச பாண்டவர்கள் கழித்து வரவேண்டிய காலமாகிய பதின்மூன்று ஆண்டுகளும் கழிந்தன. அவர்கள் துரியன் கூறியபடி- தம் நாட்களைக் கழித்த பிறகே வந்து நாட்டினை நல்குமாறு கேட்கின்றனர். அவர்கட்கு அந்நாட்டினைத் திருப்பித் தந்து விடு தலே தக்கது. அவ்வாறு இன்றிப் போர் புரிதல் முறையன்று. அர்ச்சுனன் முன் எவரும் அமர் செய்ய இயலாது” என்று உண்மையினை ஒளியாமல் சிறிது சினத்தோடு கலந்து உரைத்திட்டார்.