பக்கம்:இலக்கியத் தூதர்கள்- பாலூர் கண்ணப்பமுதலியார்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47

இவ்வாறு வீடுமர் புகலக் கேட்ட கன்னன் பொறுத்திலன். அவன் ஒரு சிறந்த வில்லாளி. ஆகவே, காங்கேயனாகிய வீடுமரை நோக்கி, "பெரி uyர், என் போன்ற வில்லாளி ஈண்டு வீற்றிருக்கப் பொதுவாக இவ்வா)! இழித்துப் பேசலாமோ?” என்று சினத்துடன் வினவலானான். வீடுமருக்குக் கன்னன் கழறிய மொழிகளைக் கேட்டதும் கோபம் வந்தது. அக் கோபத்தைக் கோப் மொழியுடன் பேசி வெளிக் காட்டாமல் சாந்தமான மொழிகளில் கன்னனுக்கு நல்ல புத்திமதிகளைக் கற்பித்து அவன் தலை குனியும் வகையில் அவனைப் பார்த்து, *'கன்னா, நீ சிறந்த ஆண்மையும் வில் வன்மையும் உடையவன் என்பது நன்கு வெளியாகியது. துருபதனுடைய மகள் திரெளபதியை மணம் முடித்த நாளில், நீ தானே அந்த அர்ச்சுனனுடன் எதிர்த்துப். போரிட்டு வென்றவன்! கந்தருவருள் ஒருவனாகிய இந்திரசேனன் துரியனைக் கட்டித் தூக்கிச் சென்ற போது, அந்தக் கந்தருவனோடு போரிட்டுத் துரியனை மீட்டவன் நீ தானே! என்று வஞ்சப் புகழ்ச்சி யோடு பேசி மேலும் அவர் “ நீ வீரம் பேசு வதில் யாது பயன் ? நீயா, கண்ண ன் தேரினைச் செலுத்தப் போர்க் களத்தில் பொலிவுடன் தோன் றும் அர்ச்சுனன் முன் எதிர் நின்று போர் செய்ய வல்லவன்? என்று பழிப்பும் இழிப்பும் கலந்து பகர்ந் திட்டார்,

இந்தவாறு வீடுமர் புகலக் கேட்ட துரியன் மேலும் சினம் கொண்டு, தூது உரைக்க வந்த உலூக மாமுனியைப் பார்த்து, முனிவரே, நீர்