6. சஞ்சயன்
பஞ்சபாண்டவர்களால் அனுப்பப்பட்ட உலூக மாமுனிவர் துரியன்பால் தூது சென்று மீண்ட செயல் முன்னர்க் கூறப்பட்டதன்றோ? அதன்பின் கெளரவர் (துரியோதனாதியர்) தாம் சும்மா இருத்தல் அடாது என்று சிந்தித்துத் தாமும் ஒரு தூதுவரைப் பாண்டவர்பால் அனுப்பித் தம் கருத்தை உணர்த்த எண் ணினர். அதன் பொருட்டுப் பாண்டவர் எப்படி முனிவர் ஒருவரை அனுப்பினரோ அதுபோலவே, துரியோதனாதியரும் தருமரி ஆகியோர்க்கும் தம் உள்ளக் கருத்தை ஒளிக்காமல் 'உரைக்க ஒரு முனிவரைத் தூதராக அனுப்ப உளம் கொண் டனர். அதன்படி சஞ்சயமா முனிவரை அனுப்புவ தாகத் தீர்மானித்தனர். சஞ்சய் முனிவரை வரு மாறு ஆளைப் போக்க, அவரும் அத்தினாபுரம் வந்து சேர்ந்த னர்.
திருதராட்டிரர் பஞ்சபாண்டவரின் பெரிய தந்தையாரேயானாலும் பட்சபாத முடையவராகவே இருந்தனர். பாண்டவர்கள் திருதராட்டிரரின் இள வலான பாண்டுவின் புதல்வர்கள் ஆவர். முறைப் படி தமக்கும் புத்திரர்கள் தாமே என்பதைத் திருதி ராட்டிரர் எண்ணாமல், தம் உரிமை மக்களாகிய துரியோதனாதியர் பக்கமே சார்ந்து , பேசலுற்றார். கண்ணிலாராகிய திருதராட்டிரர் சஞ்சய் முனிவர்