பக்கம்:இலக்கியத் தூதர்கள்- பாலூர் கண்ணப்பமுதலியார்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

கேளாத அசடர். நீங்கள் யான் கூறுவதைக் கேளுங் கள், நீங்கள் மண்ணாசையை மறந்திடுங்கள். அரசு பதவியில் ஆசை கொள்ளாதீர்கள். போர் ஆசை உங்களுக்குப் பொருத்தம் அற்றது. இவையே யான் உங்கட்குச் சொல்லக் கூடியவை” என்று கூறினார்.

இங்ஙனம் சஞ்சய முனிவர் கூறக் கேட்டதும் சினம் கொள்ளாத தருமரும் சிறிது சினங்கொண்ட னர். தாம் சினங்கொண்ட குறிப்பைச் சில மொழி கள் மூலம் வெளிப்படுத்தினர். ' முனிவரை நோக்கி, முனி சிரேஷ்டரே, அரசர்கள் தம் அரச கடனை ஆற்றாது காடு புகுந்து அருந்தவம் புரியும் கடமை கடமை யாமோ? அரசபதவியில் வாழ்வாங்கு வாழ்ந்த பின்பு அன்றோ காடு புகுந்து கடுந்தவம் புரிந்து கடவுளடி, பற்றுதல் வேண்டும் ? அரசர்கள் தம் பகைவரை ஒழித்து நாட்டில் அமைதியினை நிலை நிறுத்திய பின்பே தாம் நல்வழி நாடுதற்கான அறங்களைச் செய்யவேண்டும்” என்று அரசர்களின் கடமைகளைக் கழறினார். தருமரே இப்படிப் பேசத். தொடங்கினால் அவர் பின் தோன்றல்களான வீம: அர்ச்சுன நகுல சகாதேவர்கள் எண்ணத்தைச் சொல்லவா வேண்டும் ?

வீமன், முனிவரை நோக்கினான். முனிவரை நோக்கும் போதே அவன் கண்கள் சிவந்தன. தீப் பொறிகள் பறப்பது போல் சில மொழிகளைக் கூறலா னான். அப்போ து அவன் கூறிய மொழிகள் இடி இடிப்பது போன்றிருந்தன. அவன் முனிவரை நோக்கி, முனிவரே, நீர் எங்கட்குப் பிரம்ம குரு