ஆவீர். அப்படி இருக்க, நீர் எம் பகைவராகிய கெளரவர் சார்பில் பேசுதல் உமக்கு அடுக்குமோ ? அத்துரியோதனாதியர்தாம் நாங்கள் அனுப்பிய உலூகமா முனிவரிடம் போருக்குத் தயாராக இருப் பதாகக் கூறி அனுப்பியுள்ளனரே, எம்மூத்த தந்தை யார் உம்மிடம் கூறியனுப்பியவை தக்கவை அல்ல. அவர் தம் மக்களையும் எம்மையும் ஒரு படித்தாகக் காண வேண்டும். நம் முகத்தில் வலப்பக்கம் ஒரு கண்ணும் இடப்பக்கம் மற்றொரு கண்ணும் இருந் தால் இவற்றிற்குள் உயர்வு தாழ்வு கருதலாமோ? இவற்றினிடத்தில் வேற்றுமையைக் காணலாமோ ? அப்படி வேற்றுமை காண்பது போல அன்றோ இருக்கிறது திருதராட்டிரருடைய கருத்துரை! போர் முனையில் என் கதை கொண்டு மோதும் திறத்தை நீரே உம் கண்கொண்டு காணுங்கள். எம்போன்ற சுத்த வீரர்கட்கு நீர் கூறும் தவம் தவ மாகா து.
முனிவரே, நீர் மொழிந்திடும் தவம் அருந்தவும் அன்று. பகைவர் உடல் போரில் வெட்டுண்டு செந் நீரில் மூழ்கி, தலைகளும், தலையற்ற முண்டங்களும் பொருந்திய போர்க்களத்தில், இடையே, ஊடுருவிக் கிடக்கும் வெம்பகையினை ஒழிப்பதே எம்போன்ற வீரர்க்கு வீர சுவர்க்கம் புகுதற்குரிய தவுமாகும். ஆக்வே, போர்க்களமாகிய யாகசாலையில் துரியன் முதலான யாகப் பசுக்களைப் பலியிட்டு, கள வேள்வி (போர்க்களத்தில் செய்யப்படும் யாகம்) செய்ய எண்ணியுள்ளேன்” என்று தன் வீரம் தோன்ற விளம்பினான். இன்னமும் மேலே பேசத் தொடங்கு