வற்றை உண்டு வாழ்வதே நல்லது. இனிதும் ஆகும்" என்று கூறினார்,
இவ்வாறு தருமர் கூறியவற்றைக் கேட்ட கண்ணன், "தருமா! நீ போருக்குப் பயந்து மீண்டும் காடு நோக்கிச் சென்றால், உன்னையும் உன்னைச் சார்ந்தவர்களையும் மண்ணுலகத்தினர் இழித்துப்பேச மாட்டார்களோ? நீங்கள் முன்னர் அரச சபையில் மொழிந்த சபதங்களை எப்படி நிறைவேற்றுவீர்கள்?” என்று தூண்டினன். இப்படிப் பரந்தாமன் பகர்ந்த தைக் கேட்ட பொறுமைக் குணத்தவராம் முரசக் கொடியோர், “கண்ணா ! நீ கூறுவதும் முறையே ஆகும். ஆகையால், நீ கெளரவர்பால் தூதனாகச் சென்று எங்கட்குக் கொடுத்து விடுவதாக கூறிய நாட்டைக் கேள், நாடு தர மறுத்தால் ஐந்து சிற்றூர் களையாகிலும் கொடுக்குமாறு கூறு. அவற்றையும் கொடுக்க மறுத்தால் நாங்கள் தனித்தனி வாழஐந்து வீடுகளையாகிலும் தருமாறு வேண்டு. இவற்றையும் அவன் தர எண்ணம் கொள்ளவில்லையென்றால் போர் வேண்டுக” என்று தம் கருத்தைக் கூறினார்.
இவ்வாறு அறத்தின் வடிவமான தருமர் கூறக் கேட்ட வீமனுக்கு ஆத்திரம் மிகவும் பொங்கி எழுந் தது. “கண்ணா , என் அண்ணார் இப்படிக் கெஞ்சிக் கேட்குமாறு கூறுகின்றாரே. இவர் இன்னமும் பகை வனை ஒழிக்காமல் இருக்க எண்ணுகிறாரே. அரசசபை யில் ஏற்பட்ட அவமானத்தைப் போக்கிக் கொள்ள வேண்டாவா ?" என்று கூறிவிட்டு, தன் அண்ணா ராகிய தருமரைப் பார்த்து, "அண்ணா ! நம்மைக் காட்டுக்கு அனுப்பிய துரியனையும், அவனைச் சார்ந்த