வரையும் கொன்று உன்னை அரியாசனத்தில் வைக் கின்றேன். அ வ் வ ர வு உ ய ர் த் த வ னை யு ம் மேலுலகு சென்று அரசாளுமாறு செய்கிறேன். (அதாவது அவனையும் கொல்வேன் என்பது கருத்து). இனித் தூதுவரை அனுப்பவேண்டா . முன்னர் நாம் உ.லூகரைத் தூதராக விடுத்தது சாலும்" என்று சினத்துடன் மொழிந்தான்.
தருமர் மிகவும் பொறுமையுடையவர் அல்லரோ? வீமனுடைய வீர மொழிகளைக் கேட்டு, அவனை அமரச் செய்து, “தம்பி, வீமா, குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை. ஒரு குலத்தில் பிறந்த நாம் ஒற்று மையுடன், வாழ வழிகாணவேண்டும். சாம, (பேத. தான தண்டம் என்ற முறைவைப்பில் போர் ஈற்றில் தானே பொருந்தி இருக்கிறது ?" என்று தணிவு தோன்றச் சாற்றினார்.
இவ்வாறு தன் தமையனார் சொல்லக் கேட்ட வாயுபுத்திரன், “அண்ணா ! உம் விருப்பப்படியே மீண்டும் ஒரு தூதரை அனுப்புவோம். அப்படித் தூதுவர் ஒருவரை அனுப்புவதாயின், என் எண்ண மும் பாஞ்சாலி எண்ணமும் நிறைவேற என்னைத் துரியன் பால் தூதனாக விடுக. கிருட்டிணன் தூத னாகப் போக வேண்டா என்று வேண்டினன்.
மா ேய ர ன் வீமனுடைய வார்த்தைகளைக் கேட்டு, "வீமா! முன் பிறந்தவர் அரச முறையினை உரைத்தல் அதனைக் கேளாது நம் விருப்பப்படி நடப்பது முறையன்று. பொறு" என்று கூறி அர்ச் சுனனை நோக்கி அவனது கருத்தையும் கூறுமாறு பணித்தனன்.