59
அர்ச்சுனன் தருமரையும், மணிவண்ணனையும்" வணங்கி, " நாம் பொறுத்த பொறுமைகள் போதாவா ? இன்னமும் அறத்தைப்பற்றி அறைந்து கொண்டிருந்தால் யாது பயன்? நாம் எப்போது நம் பகைவனை ஒழிப்பது ? திரௌபதையின் கூந் தல் எப்போது முடிக்கப்படுவது ? யான் தேவர்களை யும் வெல்லக்கூடிய அம்புகளைக் கொண்டிருந்து யாது பயன் ? நமக்கு ஏற்பட்டுள்ள மாசு தீர வேண்டாவா? இந்தக் கண்ணன் சென்றாலும் சரியே, பொறுமைக்கிடமான நீங்கள் கூறியனுப்பும் கூற்றுக்களை மொழிந்தாலும் சரியே, அந்த மதியற்ற மன்னனாம் துரியன் கேளான். கெடுமதி கண்ணுக் குத் தோன்றுமா? உவர் நிலத்தில் நெல் விளைவு உண்டாகுமா? பாம்புக்குப் பால் கொடுத்தாலும் ' அது விடம் ஒழிய வேறு ஒன்றையும் தராதன்றோ ?" என்று பார்த்தன் பகர்ந்து அமர்ந்தான்.
பின்னர் நகுலனைத் தன் எண்ணம் இன்ன து. என்பதை அறிவிக்குமாறு கண்ணன் கேட்க, அவ னும் அர்ச்சுனன் உரைத்தவாறே, கண்ணா ! துரி யன் நாடு கொடுக்கமாட்டான். நம்மை நாட்டவர் இகழாவண்ணம் போரிடுவதே தக்கது. தானே அறி, யாதவன் பிறர் போய் அறிவித்தாலும் உணர மாட்டான்” என்று கூறினான்.
இறுதியாகச் சகாதேவனை நோக்கி ** உன் கருத்து யாது? என்று கேட்க, அவன் பேரறிஞன் ஆதலின், கிருட்டிணனை நோக்கி, “கண்ணா நீ நினைக்கிறபடி தூ த னா க ச் சென்றால் தான்