பக்கம்:இலக்கியத் தூதர்கள்- பாலூர் கண்ணப்பமுதலியார்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

என்ன? தருமர் கூறியவற்றை எடுத்து அவனுக் குக் சொன்னால்தான் என்ன ? துரியன் நாட்டைக் கொடுத்தால்தான் என்ன? கொடுக்காமல் போனால் தான் என்ன ? திரௌபதை விரித்த கூந்தலை முடித் தால்தான் என்ன? விரித்திருந்தால்தான் என்ன ? முடிவில் இன்னதுதான் நடக்கும் என்பது எனக்குத் தெரியும்” என்று கூறி, மேலும், “கண்ணா , உன் திருவுள்ளத்துக் கருத்து எதுவோ, அதுவே எனக் கும் கருத்தாகும்” என்று கூறிவிட்டனன்.

இத்துடன் கூறி நிறுத்தினான் அல்லன் சகா தேவன், முகுந்தனை நோக்கி, “கண்ணு ! உனது மாயை இங்கு உள்ளார் எவரும் அறியார். யான் அறிவேன். உனது திருவுள்ளத்துக் கருத்தை நான் நன்கு அறிவேன்" என்று மொழிந்தனன்.

இவ்வாறு சகாதேவன் கூறக் கண்ணன், “ஏது! இவன் நம்மைச் சந்தியில் இழுத்து வைப்பான் போல் இருக்கிறதே!” என்று மனத்துள் கொண்டு, அவனை மட்டும் தனித்ததோர் இடத்திற்கு அழைத்துச் சென்று “'சகாதேவா! பாரதப் போர் நடவா வண் ணம் ஒரு வழி கூறுக" என்று கேட்டனன்.

இங்ஙனம் கண்ணன் வினாவியபோது சகா தேவன் கிருட்டிணனை வணங்கி, "கண்ணா ! நீ பாரதப் போரில் யாவரையும் கொன்று பூ பாரம் தீர்க்கவே எண்ணியுள்ளாய்! ஆகவே, நீ அல்லாமல் பாரதப் போரை அகற்ற வல்லவர் எவர் உளர்? என் றாலும் என் கருத்தைக் கூறுமாறு நீ பணிக்