பக்கம்:இலக்கியத் தூதர்கள்- பாலூர் கண்ணப்பமுதலியார்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61

கின்றாய். ஆதலால் அதையும் கூறி விடுகின்றேன், கேள். பாரதப் போர் நிகழாமல் இருக்க வேண்டு மானால், அர்ச்சுனனை முன்னர் கொல்ல வேண்டும். கன்னனுக்கு முடி சூட்ட வேண்டும். திரெளபதியின் கூந்தலை வெட்டிவிட வேண்டும். உன்னையும் வெளி யேற விடாமல் காலில் விலங்கு பூட்டி அடைத்து விட வேண்டும். இவ்வாறு செய்தால் பாரதப் போர் வராமல் காக்கலாம்” என்றான்,

கிருட்டிணன் உடனே சகாதேவனை நோக்கி, “சகாதேவா! நீ முன்னர் கூறியவை அனைத்தையும் செய்து முடிக்க இயலும். இறுதியில் என்னையும் கட்டி விட வேண்டும் என்று கூறினாயே, அஃது எப்படி முடியும்?" என்று வினவினான்.

முடியிட்டவனுக்கு அவிழ்க் கவா தெரியாது? உடனே சகாதேவன் “உன் உண்மை வடிவத்தைக் காட்டக் கட்டிடுவன்” என்றான். கண்ணன் பதினா யிரம் வடிவு கொண்டனன். அவ் வடிவில் மூலப் பொருள் இஃது என்பதைச் சகாதேவன் தன் அறி. வினால் உணர்ந்து தன் அன்பினால் பிணித்து விட்ட னன், பரந்தாமன் சகாதேவனுடைய அன்பையும், அறிவையும் உணர்ந்து பாராட்டித் தான் கொண்ட பதினாயிர வடிவங்களை மறைத்து முன் போல் நின்று “சகாதேவா! நாம் இங்கு உரையாடியதையும், நிகழ்ந் ததையும் பற்றி உன் உடன் பிறந்தவர்கட்கோ , ஏனை யோர்கட்கோ ஒன்றும் இயம்பாதே” என்று கட்டளை இட்டனன்.