64
சோலையிடத்து வந்து தங்கினன். இவனது வருகை யைத் தூதுவர் துரியனுக்கு அறிவித்தனர். இங் ஙனம் அறிவிக்கக் கேட்ட துரியன், கண்ணனை வர வேற்க நாட்டினை அலங்கரிக்குமாறு ஆணையிட்டுத் தானும் புறப்பட்டனன். சகுனி துரியனை அவ்வாறு செய்ய ஒட்டாமல் தடுத்தனன்,
மாயவனது வருகையை அறிந்த வீடுமர், துரோ ணர், அசுவத்தாமர், விதுரர், கிருபர் முதலியோர் கண்ணனை எதிர் கொள்ளச் சென்றனர். தன்னை வர வேற்க வந்தவர்களோடு சிறிது நேரம் அளவளாவிப் பின் துளபம் அணிந்த பரந்தாமன் விதுரர் மாளிகைக் குச் சென்றனன். நெடுமாலாம் மாயோன் வேறு எவர் வீட்டிற்கும் செல்லாது தம் இல்லத்திற்கு வந் துற்றமையின் பொருட்டுப் பெரு மகிழ்வு கொண் டனர் விதுரர். அம்மகிழ்வு காரணமாகக் கண்ணனை நோக்கி, “கண்ணா , எனது சிறு குடிசையினை என் னென்று கருதினாய்? நீ முன் னே உறங்கிய திருப் பாற்கடல் என்று நினைத்தனையோ? அல்லது உனது படுக்கையாகிய பாம்பணை என்று நினைத்தனையோ? அன்றி ஊழிக் காலத்தில் உறக்கங் கொள்ளும் ஆல் இலை என்று எண்ணினையோ? நால்வகை வேதங் கட்கு உறைவிடம் என்று உணர்ந்தனையோ? நீ என் குடிசையில் எழுந்தருளியதற்கு என் இல்லம் பெரிய தவம் செய்திருக்க வேண்டும்” என்று உபசார மொழி கள் கூறினன். விருந்துணவையும் கண்ணனுக்குப் படைத்தனன், அன்று இரவு மாயோன் தான் வந்த களைப்பு நீங்க நன்கு உறங்கி, மறுநாள் துரியன் அரச சபைக்குப் புறப்பட்டனன்.