பக்கம்:இலக்கியத் தூதர்கள்- பாலூர் கண்ணப்பமுதலியார்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57

யேனும் தருதி" என்றனன், அதனையும் தர மறுத் தனன் துரியன், கண்ணன் மீண்டும் ““ஐவர்களும் தனித்தனி வாழ ஐந்து ஊர்களையேனும் வழங் குக” என்று இரந்தனன். இவ்வளவு கெஞ்சிக் கேட்டும் ஒரு வீடுகூட அளிக்க மறுத்தனன் துரி யன்,

மாயன் மேலும் துரியனை நோக்கி, “து ரிய! வீடுமர் தம் தந்தையாரின் பொருட்டு, தம் வாழ்வை கயும், அரசினையும் துறந்து உன்னுடனே வாழ்ந்து வருகின்றார், அதனை எண்ணியேனும் உன் துணை வர்கட்கு ஐந்து ஊர்களைக் கூட நீ கொடுக்க மறுத் தால், உனது அரசியலை என்னென்று உரைப்பது! ஒரே குலத்தில் இரண்டு மன்னர் உடன் பிறந்து அரச உரிமை பெற்றால், இருவரும் ஒற்றுமையுடன் வாழ்வது தானே முறையாகும்? அப்படி இருக்க, குரு குலத்தவர்களாகிய நீங்கள் இருவரும் மன வேறு பாடு கொண்டு வாழ்வது பெருங்குறையாகும் ”' என்று எடுத்து மொழிந்தனன்.

இவ்வார்த்தைகளைக் கேட்ட துரியன் “கண்ணா! நாட்டை எளிதில் பெறலாம் என்று எண்ணிவந்த னையோ ? நாடு வீரர்களுக்கு உரியதன்றி, வேறு எவர்க்கும் உரியதன்று" என்று கூற, உடனே கண்ணன் இதுதான் சமயம் என்று, மன்னர் மன்னா. இவ்வாறு ஆண்மையோடு பாண்டவருடன் (போரிட எண்ணமிருக்குமானால் கைபோட்டுத் தருக, அதாவது சத்தியம் செய்து கூறு $” என்று கேட்ட னன் .