இவ்வாறு கூறக் கேட்ட துரியனுக்கு அடக்க ஒண்ணாத சினம் பொங்கியது, “காட்டில் காளை மாடுகளையும் கன்று காலிகளையும் மேய்க்கும் இடை யனாகிய நீயா, என் குருகுலத்து வாய்மை அறியாது. இந்த வார்த்தையினை இச் சபையில் மொழிந்தாய்! யானைகள் எதிர்த்தால் சிங்கங்கள் அஞ்சுமோ? அதுபோலப் பாண்டவர் என்னைப் பகைத்துப் போரிட்டால் அதற்கு அஞ்சி யான் பின் அடை வனோ? நா ஒன்றா ? இரண்டா ? அ ப் ப டி இருக்க, யான் கை அறைந்து கொடுக்கவேண்டுமா? பஞ்சபாண்டவர்கள் தம்மை வீரர் என்று கூறிக் கொள்ளத் தகுதியுடை யரோ? அவர்களின் இல்லாள் இராச சபையில் துகில் உரியப்பட்டபோது பார்த் துக் கொண்டிருந்தவர்கள் தாமோ வீரர்கள்?” என்று இழிவா க மொழிந்தனன்.
இங்ஙனம் துரியன் மொழிந்த மொழியின் கருத். தைக் கண்ணன் உணர்ந்து, பாம்புக் கொடியோன் போரினுக்கு ஆயத்தமாக இருக்கின்றனன் என்று முடிவு செய்து கொண்டு, இராச சபையினை விட்டு விதுரர் வீடுவந்து சேர்ந்தனன், அதன்பின் கண் ணன் குந்திதேவி இருந்த இடத்தை அடைந்தனன். அவளும் தன் மைந்தர்களை எதிரே கண்டவள் போல் மனமகிழ்ந்து நல்ல முறையில் வரவேற்றாள். கண் ணன் பாண்டவர் பொருட்டுத் துரியனிடம் தூது போந்தும், நாடுபெற வழி இன்றிப் போர் தொடுத்துப் பெறவே வழி ஏற்பட்டது என்பதை எடுத்துக் கூறிக் குந்தியை நோக்கி, “குந்திதேவியே, நீ நேரே கன் 60 னிடம் போய், 'நான் தான் உன்னைப் பெற்ற