பக்கம்:இலக்கியத் தூதர்கள்- பாலூர் கண்ணப்பமுதலியார்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69

தாய்' என்பதை எடுத்துச் சொல்லுக" என்று கூறி, குந்தி எப்படிக் கன்னனுக்குத் தாயாவாள் என்ற வரலாறுகளையும் சொல்லி அனுப்பினான், அத் துட ன் இன்றி, அவர் வளர்த்து வரும் நாகாத்திரத் தினை (பாம்பாகிய அம்பை) ஒரு முறைக்குல் மறு முறை அர்ச்சுனன் மீது விடாதிருக்குமாறு வற்புறுத் திக் கூறவும் சொல்லி அனுப்பினான்.

இதற்கிடையில் துரியனும் அவனைச் சார்ந்த சதி காரரும் “கண்ணன் தனித்துள்ளான். இவனது சகாயம் பாண்டவர்க்கு மிகுதியும் உண்டு. ஆகவே, இவனை என்ன செய்வது?" என்று சிந்தனை செய்கை யில், துரியன் தந்தையார் திருதராட்டிரர், அவனைக் கொல்வதே முடிந்த முடிபு" என்று மொழிந்தனர். நீதி முறை அறிந்த விகர்ணன், வயதில் மூத்தவர் களையும், இளையவர்களையும், வேதம் உணர்ந்த முனி வர்களையும், மாதர்களையும், 'தூதர்களையும் போற்றிப் புகழ்கிறவர்களையும், அரசர்கள் கொல்லுதல்கூடாது. கொல்லுதல் பெரும் பாவம் ஆகும். இதைவிடப் பெரும் பாவம் எதுவும் இல்லை. அப்படிக் கொன்ற வர்கள் நரகமே புகுவர்" என்று கூறினான்.

இவ்வாறு விகர்ணன் கூறக்கேட்ட சதிகாரர்கள், இறுதியில் “'தூதனைக் கொல்லுவது முறை அன்று தான். ஆனால், சிறைப்படுத்தல் ஒழுங்கு” என்று முடிவு செய்தனர். அதன்பொருட்டு நில அறை ஒன்று அமைத்து அதன் மீது விரிப்பு ஒன்றை விரித்துக் கீழே நில அறை உண்டென்று அறியாவாறு செய்து, மேலே தவிசு இட்டுக் கண்ணனை அதன் மீது அமரச் செய்ய ஏற்பாடு செய்தனர். இவ்வாறு