பக்கம்:இலக்கியத் தூதர்கள்- பாலூர் கண்ணப்பமுதலியார்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

செய்ததன் கருத்து, அதன் மீது கண்ணன் அமர்ந் ததும் அத் தவிசு நில அறையில் புகும். அது போது அங்கு முன்பே இருக்க வைத்த மல்லரைக் கொண்டு மாயனைப் பிணித்து விலங்கிட்டுச் சிறை செய்யலாம், என்பது.

மீண்டும் கண்ணன் துரியன் சபையினை அடைந்தனன், கண்ணனை அப்பொய்த் தவசில்" அ ம ரு ம ா அ து ரி ய ன் கூறினன், எல்லாம் அறிந்த கண்ணன் அத் தவிசினைச் சார்ந்ததும், அது முறிந்தது, உடனே கண்ணன் பேருருவம் கொண்டு நின்றான். தன் காலாலும் கையாலும் மல்லர்களைச் சாடினன். கண்ணனின் தோற்றத்தையும் சீற்றத் தையும் அங்குள்ளார் அனைவரும் கண்டனர்,

மாதவனே எங்களைக் கோபிக்க வேண்டா , எங் களை ஆட்கொள்ளும் தேவனே கோபிக்க வேண்டா. எ ங் க ள் ' உ ள் ள த் தி ல் குடிகொண்ட வனே கோபிக்க வேண்டா” என்று பலவாறு கண்ணனை அவர்கள் போற்றி வேண்டினர்.

அதன்பின், கண்ணன் தன் சீற்றம் தணிந்து இயற்கை உருக்கொண்டனன். துரியனை நோக்கி, “துரியா உன் மதி கேட்டினால் என்னையா கொல்ல முயன்றனை? உன்னையும் உன்னைச் சார்ந்தவரையும் கொல்ல வழி தேடுகிறேன் பார். அதனை நீ விரை வில் உணர்வாய்” என்று கூறி இந்திரனை அழைத்துக் கன்னனிடம் சென்று அவனுடன் தோன்றிய கவச குண்டலங்களை, (மார்பு கவசம், காதணி) வேண்டிப்பெறுமாறு பணித்துப் பாண்டவர் வாழும் இடத்தை அடைந்தான்.