இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
71
அங்ஙனம் அடைந்த கண்ணன் தருமரிடம், தான் தூதனாகச் சென்று கூறியதையும், துரியன் மறுத்துப் போரிட ஆயத்தமாய் இருப்பதையும், விதுரன் வில்லை முறித்ததையும், துரியன் தன் உயிரைப் போக்க முயன்றதையும், இந்திரன் கன்னனிடமிருந்து கவச குண்டலங்களைப் பெற்றதையும், குந்தி கன்னனிடம் வரங்கள் பெற்று வந்ததையும் மொழிந்தனன், எல்லார்க்கும் முன்னவனே முன் நின்றால் முடி யாத பொருள் உளதோ!