பக்கம்:இலக்கியத் தூதர்கள்- பாலூர் கண்ணப்பமுதலியார்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75

இருக்கிறது என்பதை என்னால் அறிந்து கொள்ள இயலவில்லையே!

"தம் முகப் பொலிவையும் கெடுத்துக் கொண்டு, நாணத்தினை யுடையவராய் பொருள் இல்லை என்று கூறும் மயக்கத்தினைத் தெளிவு படுத் தற்கு அன்றே பொருளினை உதவும்போது நீருடன் உதவும் மரபு ஏற்பட்டுள்ளது? மேலும், நம்மை அடைந்து ஒன்றைக் கேட்கும் இரவலர், உறவு முறையினரை விட இனியவர் ஆவர். இப் பிறவி யில் அவ்விரவலர்கட்கு அருளுடன் ஈந்து இன்புறு வோமானால், அவர்கள் மறு பிறப்பில் அவற்றை" வழங்கி விடுவர்.

மேலும், பெருஞ் செல்வத்தை இறைவர் கொடுத் . திருப்பது, உலகில் புண்ணியமாகிய பேற்றைப் பெறு. வதற்கே ஆகும். ஆகவே, வறுமையால் வாடி வந்து கெஞ்சிக் கேட்பவர்கட்கு அன்புடன் உதவி னால் ஒன்று பலவாகப் பெருகும்” என்றெல்லாம் எண்ணினான்.

இவ்வாறெல்லாம் எண்ணி “தேவர்காள், என் தொல்குலம் செய்த தவம் காரணமாக உம்மைக், கண்டேன். நீங்கள் என்னிடம் விரும்புவது யாதோ அறியேன். அதனைக் கூறினால் மாறாமல் செய்கின் றனன்” என்று உறுதி கூறினன்.

இந்திரன் நளனை நோக்கி, ஐய, நளனே! நீ' எங்கள் பொருட்டுத் தமயந்தியிடம் சென்று, எங்கள் நால்வருள் ஒருவருக்கு மணமாலை சூட்டுமாறு அவ ளிடம் சொல்லவேண்டும் என்றனர். இவ்வாறு,