பக்கம்:இலக்கியத் தூதர்கள்- பாலூர் கண்ணப்பமுதலியார்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

தன் இணையடி போற்றும் நிலையினைப் பெற்றவன், சிந்தாமணி, காமதேனு, கற்பக விருட்சம் ஆகியவை தனக்கே உரியன என்னும் தனி உரிமை பெறி றவன். கடலைக் கடைந்து திருமகளைப் பெற்று அவளைத் திருமாலுக்கு ஈந்த பெருமை நிறைந்தவன். உலகில் நூறு யாகங்களைச் செய்து இந்த இன்ப நிலை யினைத் பெற்றவன். மேலும் கேள்; உலகில் சிறப் புடன் வாழும் மக்கள் தொகுதியில் சிறந்தவர் இயக் கர்கள். அவ் இயக்கர்களைக் காட்டிலும் தேவர்கள் சிறந்தவர்கள். அத்தகைய தேவர்களுக்குத் தலைவ னான இந்திரனை நீ மணந்தால் அவன் உன் ஏவல்படி நடப்பான், அஃது உனக்குப் பெருஞ் சிறப்பு அன்றோ ?” என்றனள். “தேவர்களேயானாலும் நான் நளனையன்றி வேறெவரையும் மணவேன். ஆகவே, நீ வந்த வழி நோக்கி இந்திரனை அடைக” என்று தமயந்தி கூறினாள். இவ்வாறு தமயந்தி உரைப்பக் கேட்ட உருமறைந்து நின்ற நளன், தமயந்தி தன் னிடம் வைத்துள்ள உண்மை அன்பை, எண்ணி எண்ணி உள்ளம் பூரித்தான். இந்திரன் விடுத்த தூதிக்குத் தமயந்தி விடுத்த விடைகளைக் கேட் டதும், இயமன் விடுத்த தூதியும், அக்கினி அனுப்பிய தூதியும் வருணன் போக்கிய தூதியும் தமயந்தியிடம் ஒன்றும் கூறாது திரும்பி விட்டனர்.

இனி, நளன் தான் வந்த காரியத்தினை இனிது முடிக்கும் பொருட்டு, இனி, தான் மறைந்த வடிவில் இருந்து பயன் இல்லை என்று உணர்ந்து, அக் கன்னிமார்களின் கட்புலன் முன்னால் மெய் வடி வுடன் தோற்றம் அளித்தனன்,