79
தமயந்தியின் அருகு இருந்த தோழியர் “ஐயா, காவலையுடைய நகரைக் கடந்து இக் கன்னி மாடம் புகுந்த நீ யாவன்? உன் பெயர் யாது? என்று வின வினர். உடனே நளன், ""நங்கைமீர்! உமது தலைவி தமயந்தியின் சுயம்வரத்தைப் பற்றிக் கேள்வியுற்ற தேவர்களாம் இந்திரன், இயமன், அக்கினி, வரு ணன் ஆகிய நால்வரும் என்னைத் தமயந்தியிடம் தூதனாக அனுப்பினர். ஆகவே, யான் தேவர்கள் தூதன். அந் நான்கு தேவர்களும் உன் தலைவி யினை மணாட்டியாகப் பெற முயன்று வருகின்றனர். அவர்களுள் ஒருவருக்கு அவள் மண மாலை சூட்ட வேண்டும். இதனைக் கூறவே அவர்களால் ஏவப் பட்டு இங்கு வந்துற்றனன்” என்றனன்.
இவ்வாறு கூறக் கேட்ட தமயந்தியின் தோழி யர், “எங்கள் கல்வியா ன வீமராசன் திருமகள், நிடத நாட்டு மன்னனையே தன் உயிரெனக் கருதி ஃயுள்ளாள், அவ்வாறு இருக்க, இப்போது இவ்வாறு கூறி அவளது உயிர் துடிக்குமாறு செய்து விட்டாய். எங்கள் தலைவி தமயந்தியின் உள்ளக் கிடக்கை யினைக் கூறுகின்றோம், கேள்; எங்கள் தலைவி தமயந்தி, உலகை ஒரு குடைக் கீழ் ஆளும் புகழ் பெற்ற நிடத தேசத்து மன்னனாம் நளனைத் தவிர்த்து வேறு யாரையும் மணம் புரிந்து கொள்ளமாட்டாள், வேறு ஒருவருடைய பெயரைக் கூறினும் உளம் பொறுக்கமாட்டாள். நளனை மணக்க வாய்ப்பு இல்லை யாயின் தீயில் மூழ்கி உயிர் விடுவாள்" என்றனர்.
நளன் எப்படியும் தன் கடமையினை உளமார வும் ஒழுங்காகவும் செய்து முடிக்க வேண்டும் என்ற