பக்கம்:இலக்கியத் தூதர்கள்- பாலூர் கண்ணப்பமுதலியார்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

உள்ளத்தினனாய், சேடியர்களை நோக்கி “தோழியரி களே! உமது தலைவி நளனைத்தான் மணப்பாளோ ?', மற்றவரை மணக்க இசையாளோ? நளனை மணக்கும் பேறு பெறாளாயின், தீயில் வீழ்ந்து உயிர் விடுவாள் என்று கூறினீர்? அப்படி உம் தலைவி அக்கினியில் மூழ்கினால் அக்கினியோடு சேர்ந்த அபவாதம் நேரி' டாதோ? அல்லது நீருள் மூழ்கி உயிர் விட்டால் வருணனோடு கலந்ததாக வார்த்தை எழாதோ? மேலும் கூறுகின்றேன் கேளுங்கள்; திருமணத்தினை எவர் முடித்துக் கொண்டாலும், அக்கினியைச் சான்றாக வைத்து அன்றோ முடித்துக் கொள்ள வேண்டும் ?" என்று கூறினான். நான் மொழிகள் தமயந்தியின் இரு செவிகளில் இரும்பைக் காய்ச்சி' ஊற்றியது போல இருந்தன.

தோழியர் நளனை நோக்கி, “நீ என்ன கூறினும் தமயந்தி நளனைத்தான் மணப்பள் என்று முடிந்த முடிபாகக் கூறி விட்டனர்.

இம் முடி.பைக் கேட்ட நளன் இதற்கு மேல் நான் ஒன்றும் கூறுதல் கூடாது என்றுணர்ந்து தன் கடமையினை இனிது முடித்து விட்டதாக எண்ணி, மீண்டும், தேவர்களை அடைந்து தமயந்தியைக் கண்டதையும், அவளுடைய தோழியர் விடுத்த மறு மாற்றங்களையும், தமயந்தி கொண்டுள்ள உறுதி' யினையும் கூறினன். தேவர்களும் நளனது கடமை உணர்ச்சியையும் தூய உள்ளத்தினையும் பாராட்டிச் சென்றனர்.