82
வந்த பணி. விரும்பின பிடித்து அ.
இத்தகைய பொலிவுடன் அன்னம் வீற்றிருக்கு மானால், அதனைக் கண்ணுற்று மகிழாமல் இருக்க முடியுமா? முடியாது. . ஈண்டு நளன் முன் காட்சி அளித்த அன்னம் தனது உடலின் பொன் நிறத்தி னால், சோலையின் நிறத்தையே மாற்றி விட்டது, தனது பாதத்தின் செந்நிறத்தால், குளத்தையும் செந்நிறமாக்கிவிட்டது. இத்தகைய நிற அழகும், உடல் அழகுமுடைய அன்னத்தைப் பிடித்து அத னுடன் உரையாட நளன் விரும்பினான். விரும்பித் தன்னுடன் வந்த பணிப்பெண்களுள் ஒருத்தியை அழைத்து, அதனைப் பிடித்து வருமாறு ஏவினான். பணிப்பெண் அன்ன நடை போல் நடந்து அன்னத்தை அணுகினாள். அன்னம், தன் நடை போல் நடந்து வந்த பெண்ணினை வியப்புறப் பார்த்துக் கொண்டு இருக்கையில், அவள் அதனைப் பிடித்து வந்து நான் முன் வைத்துப் பணிந்தனள்,
தான் அதனைக் கையில் கொண்டு, அதன் அழ கைக் கண்டு அகம் மகிழ்கையில், அன்னம் கலங்கி யது. தன் பெடை அன்னத்தை எண்ணி எண்ணி ஏக்க முற்றது. மன்னன் முகத்தைத் துன்பக் குறியுடன் நோக்கியது. நளன் அன்னத்தின் மன நிலையினை உணர்ந்தான். இதுபோது அன்னம் மகிழும் வண்ணம் இன் மொழிகளைக் கூறினால் அன்றி, அன்னம் துயர் நீங்காது என்று உணர்ந்தான். உணர்ந்து அன்னத்தைப் பார்த்து, "அன்னமே, அஞ்சாதே. உன்னை யான் ஏதும் செய்யேன். புல வர்கள், பெண்கள் நடையினை அன்ன நடை என்று புகழ்வர். அஃது உண்மைதானா என்பதை அறி யவும், உன் நடையையும், பெண்கள் நடை