83
யினையும் ஒப்பிட்டுப் பார்த்து எது மிக்கது என்பதை உணரவும்தான் உன்னைப் பிடித்தேன். மேலும், உன் பால் அமைந்த பொன் நிறத்தை நான் இதுவரை கண்டிலேன். அதனையும் வியந்து நோக்க உன்னைப் பிடித்தேன் என்று அன்பு மொழிகளைக் கூறினான்,
இந்த இனிய அன்பு மொழிகளைக் கேட்ட அன்னத்தின் தடுமாற்றம் தீர்ந்தது. உடனே நளனது கையினின்றும் நீங்கிப் பறந்து சென்று தனது இருப் பிடமாகிய தாமரைத் தவசில் சென்று அமர்ந்தது. சிறிது நேரம் அங்குத் தங்கி, “என்னை அரசனாம் நளன் பிடித்தும் யாதும் செய்திலன். அன்னவன் செய்த நன்றிக்கு நானும் எதிர் நன்றி செய்ய வேண்டும்” என்று எண்ணி நான் கையில் மீண்டும் வந்து அமர்ந்தது.
நளன் கையில் அமர்ந்த அன்னம் நளனை நோக்கி, “மன்ன, என்னுடைய சோர்வையும், அச் சத்தையும் கண்டு என்னை விடுதலை செய்தனையே, இதனால் உனது கருணை இன்னது என்பது எனக்குத் தெளிவாகிறது” என்றது. இவ்வாறு. தன் கருணை யைப் புகழக் கேட்ட நளன் அன்னத்தை நோக்கி, ** அன்னமே, நீ ஏன் மீண்டும் என்பால் வந்துற்றனை” என்று வினாவினான்.
இவ்வாறு வினாவிய நளனை நோக்கி அன்னம், “அரசே, என்னைப்போன்ற சிறு பறவைகளால் உனக்கு எந்த விதமான உதவியும் செய்ய இயலாது என்பதை நான் தெரிந்திருந்தும் ஒரு சிறு நன்றியைச் செய்ய விரும்பியுள்ளேன். அஃது இன்னது எ ன் ப தை த அறிவிக்கவே