3
துச் சொல்லவேண்டும். இன்னாதது இருக்கு மாயின், அதனைச் சொல்லும் காலத்து, இனிய சொற்களால் எதிரி மனம் மகிழும்படியும் சொல்ல வேண்டும். இதனால் சுருங்கச் சொல்ல வேண்டும் என்பதும், விளங்க உரைக்கவேண்டும் என்பதும், விரும்பாத சொற்களை நீக்கவேண்டும்' என்பதும், மகிழுமாறு பேசவேண்டும் என்பதும் விளங்குகின் றன அல்லவா?
தூதராகச் சென்றவர், தம்மை அனுப்பியவர் கூறியவற்றை எதிரியிடத்தில் கூறும்போது, அவ் வெதிரி கோபங்கொண்டு, தம்மைக் கொல்வான் போன்று சீற்றக் குறியுடன் பார்க்கவும் நேரிடும். அந்தக் காலத்திலும் சிறிதும் அஞ்சுதல் கூடாது, காலத்தை அறிந்து காரியம் முடிதற்கான முறையில் பேசி நடந்து கொள்ளல் வேண்டும். இவற்றோடு தம் கடமையையும், காலத்தையும், இடத்தையும் அறிதல் தூ துவர்க்குத் தலைசிறந்த பண்பு ஆகும். தம்மவர் நிலையினையும், எதிரிகளின் நிலைமையினை யும், அறிந்து அவற்றிற்கு ஏற்பச் செயல் முறை களைச் செய்தல் வேண்டும்,
தூதுவர்க்கு உள்ளத்தூய்மை வேண்டற்பாலது, பொருளை விரும்பலும் இன்பம் விழைதலும் கூடா. துணிவுடைமை வேண்டியது. துணிவுடைமை யாவது திட, புத்தியாம். தம்மை அனுப்பி, "இன்னவை கூறி வா” என்று கூறி விடுத்தபோது, தமக்கு ஏதேனும் தீங்கு வருமே என்று கருதி, அஞ்சித் தம் தலைவர்க்குத் தாழ்வு வரும் வார்த்தைகளை வாய் சோர்ந்தும் சொல்லாத பண்பாடு, தூதுவர்க்கு