ஈண்டு மீண்டும் வந்தான். ஆகவே எனது பணி வான மொழிகளை நீ விரும்பிக் கேட்க வேண்டும். உலகோர் பொன் கிண்ணத்தில் பால் கொண்டு கிளியையும், நாகணவாய் புள்ளையும் (மைனா) உண் பித்து, அவற்றிற்குத் தாமே சொற்களையும் கற்றுக் கொடுத்து அச் சொற்களையே அவை திருப்பிச் செல் வதைக் கேட்டு மகிழ்வர். ஆகவே, யானும் ஒரு பறவை ஆதலின், என் மொழிகளை மறுக்காமல் கேட்க வேண்டும்” என்று கூறி, “மன்னா! நீர் வளம், குடி.வளம், கோன் வளம், முதலான எல்லா வளங் களும் கொண்ட விதர்ப்ப தேசம் என்னும் நாடு உளது, அதன் மன்னன் வீமராசன் என்பவன். அவன் ஒரு பெண்ணைப் பெற்றெடுத்தனன். அப் பெண்ணின் அழகிற்குத் தேவலோக மாதர்களாகிய மேனகை, ஊர்வசி, அரம்பை, திலோத்தமை ஆகிய மாதர்கள் கூடச் சமம் ஆகார். அவளது திருப் பெயர் தமயந்தி என்பது" என்று கூறிக் கொண்டு வரும்போது நளன் இடை மறித்து அன்னமே அவளை இங்கு ஏன் நினைந்தனை” என்று வினவினான்., உடனே அன்னம் "மன்னா! அவள் அழகுக்கும், பண் புக்கும் ஏற்ற கணவனை மூன்று உலகங்களிலும் காண்ட. ல் அரிது என்பதை நான் நன்கு அறிவேன். ஆனால், நான் உன்னைக் கண்டதும், அவளுக்கு ஏற்ற திருவும் (அழகும், செல்வமும்) உருவும் (வடி வழகும்) உடைய நீ தான் மணாளனாக அமைதறி குரியவன் என்பதை உணர்ந்துதான் அவளை இங்கு நினைந்தேன். மன்னா, மேலும் அவளது பண்பைப் பற்றியும் கேட்பாயாக, அவள் பால் அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு (ஆடவர்,
பக்கம்:இலக்கியத் தூதர்கள்- பாலூர் கண்ணப்பமுதலியார்.pdf/90
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை