பக்கம்:இலக்கியத் தூதர்கள்- பாலூர் கண்ணப்பமுதலியார்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87

மாட்டேன். ஆனால், நளன் இடும் புண்ணியைப் புரிவு தில் எனக்குப் பெருமகிழ்ச்சி யுண்டு, அவன் நல்ல உள்ளம் படைத்தவன். நற்குணம் வாய்ந்தவன். செங்கோல் நடத்தும் செவ்விய மன்னன். நல்ல அழகிய பெரிய தோள்களையுடையவன். உண்மை 2.ரைக்கும் உத்தமன், அவனை விட மிக்காரும் ஒப்பாரும் மேலுலகினும் கீழ் உலகிலும் இலர், மன் மதனை ஒத்த பேரழகு வாய்ந்தவன். நான் என்னும் பெயருடையவன். அவன் பொறுமையில் நில மகட்கு ஒப்பானவன். அவனது உள்ளம் எப் போதும் அறத்தையே நினைத்த வண்ணம் இருக்கும். அவனுடைய கண்களில் அருள் நோக்குப் பொலிந்து கொண்டிருக்கும். அத்தகைய நலனுக்கு ஏற்ற நங்கை நீயே அன்றி வேறு எவரும் ஆகார். விதியும் கூட நீயும் அவனும் மணந்து வாழும் நிலையினைக் கூட்டுவிக்கின்றது. நீயே நளனுக்கு உரியவள் என்பதைப் பிரம்மதேவனும் எனக்குக் கூற நான் கேட்டுள்ளேன்" என்று கூறி முடித்தது.

தமயந்தி நளனது அழகையும், பண்பையும் அன்னம் உரைத்ததைக் கேட்டு, எவ்வாறேனும் அவனுடன் மணந்து வாழ எண்ணம் கொண்டு. *'அன்னமே! 6ான் 2.யிரை க்காக்க விரும்பினால் என் விருப்பத்தைச் சோலையில் தங்கி இருக்கும் நளமகா ராசனிடம் போய் உடனே அறிவித்து மேற்கொண்டு ஆவனவற்றைப் புரியவும்” என்று வேண்டினாள்.

ஆனால், அன்னம் தமயந்தி நளன்பால் உறுதி யான அன்புடையவளா என்பதை அறியப் பல வினாக்களை எழுப்பியது. அவ்வினாக்களுள் ஒன்று