பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/109

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
9. இந்திரன் விடுத்த தூதன்

நளன் வரலாற்றைக் கூறும் இருநூல்கள்

முதல் ஏழு வள்ளல்களில் ஒருவனாகிய நளனது வரலாற்றைக் கூறும் நூல்கள் தமிழில் இரண்டுள. அவற்றுள் தலையாயது நளவெண்பா. மற்றொன்று நைடதம் என்னும் நற்காவியமாகும். ‘வெண்பாவிற் புகழேந்தி’ என்று புலவரெல்லாம் வியந்து போற்றும் சிறந்த கவிஞராகிய புகழேந்தியார் நளவெண்பா நூலை யாத்தனர். ‘நைடதம் புலவர்க்கு ஒளடதம்’ என்று நாவலர் நயந்து போற்றும் நைடதக் காவியத்தை நற்றமிழ் வல்ல சிற்றரசனாகிய அதிவீரராம பாண்டியன் ஆக்கினான்.

ஆதாரமாய் அமைந்த நூல்கள்

புலமை நலத்தால் புகழேந்திய புலவராகிய புகழேந்தியார் பாரதக் கதையில் வரும் நளன் சரிதையை ஆதரவாகக் கொண்டு நளவெண்பா நூலைப் பாடினர் என்பர். சூதாட்டத்தால் நாட்டை யிழந்து காட்டை யடைந்து கவலுற்றுக் கொண்டிருக்கும் பாண்டவர்க்கு ஆறுதல் கூறும் வேதவியாசர், நளன் வரலாற்றை எடுத்துக்காட்டாகக் கூறிவிளக்கினார். அதனை அடிப்படையாகக்கொண்டே நூலைப்பாடியதாகப் புகழேந்தியார் நளவெண்பாவின் தோற்றுவாயில் நவில்கின்றார், நளனால் ஆளப்பெற்ற நாடு நிடதம் எனப்படும்; ஆதலின் அந்நாட்டு மன்னன் வரலாற்றைக் கூறும் காவியம் ‘நைடதம்’ எனப்பட்டது. இந்நூல் வடமொழியில், ஹர்ஷ கவி என்பார் இயற்றிய