பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/37

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தோழர் விடுத்த தூதர்

29

“ஒளிவளர் செய்ய பாதம்
வருந்தவோர் இரவு மாறா
தளிவரும் அன்பர்க் காக
அங்கொடிங் குழல்வீ ராகி
எளிவரு வீருமானால்
என்செய்கேன் இசையா(து)”

என்றார். ‘தோழராம் அடியவர் பொருட்டு நடுநிசிப் பொழுதில் இருமுறை எளியராய்த் தூது வருவீராயின் அடியேன் இசையாது என் செய்கேன்’ என்று பணிந்த மொழி பகர்ந்து நின்றார்.

தோழரின் துயரை நீக்கல்

அது கேட்ட பெருமான், “நங்கையே! நின் தன்மைக்கேற்ற நன்மொழியே நவின்றாய்” என்று பரவையாரின் பண்பினைப் பாராட்டி எழுந்தார். தூது சென்ற காரியத்தைத் தீதின்றி இனிது முடித்த இறைவன் விரைந்து திருக்கோவில் தேவாசிரிய மண்டபத்தைக் குறுகினார். அவரைத் தூதாக விடுத்துத் துயில்கொள்ளாமல் துயருடன் உழன்றுகொண்டிருக்கும் தொண்டரை அணுகினார். ‘நம்பியாரூர ! நங்கையின் சினத்தைத் தணித்தோம்; இனி நீ போய், அவளை எய்துவாய்’ என்று அருள்புரிந்தார். அது. கண்டு சிங்தை களிகூர்ந்த சுந்தரர், “எந்தை பிரானே! எனக்கு இனி இடர் ஏது?” என்று அவர் அடிமலரில், விழுந்தார். சேயிழைபாற் செல்லுகவென அருள் கூர்ந்து ஆரூர்ப்பெருமான் திருக்கோவிலுட் புகுந்தார்

மாளிகையில் சுந்தார்க்கு வரவேற்பு

நம்பியாரூரர் எம்பிரான் இன்னருளை வியந்து மகிழ்ந்தவராய்ப் பரவையார் திருமாளிகைக்குப் புறப்பட்டார். காலப்பொழுதில் கடிமணத் தென்றல்