பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இப்பாடலில் பேய், எருது. பெருச்சாளி எனும் மூன்று ஊர்திகள் குறிக்கப்பட்டு, அவற்றில் ஏறுவாராக, நுங்கை, நுந்தை, நீ என்பார் சுட்டப்படுகின்றனர். 'நீ என்பது நாரைப்பதிச் சிவக்களிறான பிள்ளையாரைக் குறிப்பதால், நிரல்படி அவர் ஏறும் ஊர்தி பெருச்சாளி எனப் பொருந்த, நுந்தை சிவபெருமானாகிறார். அவர் ஊர்தி எருதாகப் பொருந்துகிறது நுங்கை எனச் சுட்டப்படும் பிள்ளையாரின் தங்கைக்கு ஊர்தி பேய் என்பது நம்பியாண்டார் கூற்று. பேயை ஊர்தியாகக் கொண்ட இப்பெருமாட்டி பிள்ளையாரின் தங்கை எனில் சிவபெருமானின் திருமகளன்றோ? -- இரட்டை மணிமாலையின் பதினான்காம் பாடல், 'வீரணக்குடி ஏந்திழைக்கும் பூந்தார்க் குமரற்கும் நீ முன்னினை என்று நாரைப்பதி விநாயகரைப் போற்றுகிறது. - . . ஏறிய சீர்வீ ரணக்குடி ஏந்திழைக் கும்இருந்தேன் நாறிய பூந்தார்க் குமரற்கும் முன்னினை நண்ணலரைச் சீறிய வெம்பணைச் சிங்கத்தி னுக்கிளை யானைவிண்ணோர் வேறியல் பால்தொழு நாரைப் பதியுள் விநாயகனே." வீரணக்குடி என்று பதிப்புச் சுட்டும் ஊரை, முத்து சு. மாணிக்க வாசகன் வீரனத்குடி எனக் கொண்டு குறித்துள்ளார். இந்த இரண்டு பாடல்களில் எது சரியானது? வீரணக்குடியே சரியான பாடம் எனக் கொள்ளின், நம்பியாண் டாரின் இரண்டு பாடல்கள் வழிப் பிள்ளையாரின் தங்கையாக அறிமுகமாகும் இந்த ஏந்திழை, வீரணக்குடி இருப்பவர் எனக்கொள்ள நேரும். பேயை ஊர்தியாக உடைய இவரைப் பற்றி வேறெந்தத் தகவலும் இலக்கியங்களில் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், இவர் ஊர்தியாகக் கொண்டிருக்கும் பேய் சிவபெருமானுக்கு மிக நெருங்கிய உறவாகத் திருமுறை ஆசிரியர்களால் கொண்டாடப் படுகிறது. - - அப்பர் பெருந்தகை, பேய்க் கணத்தோடு இணங்கி நின்றாடி யவை இறைவன் திருவடிகள் என்று போற்றுகிறார். பேய்கள் வாழும் காட்டிலேயே இறை நடனம் நித்தமும் நடக்கிறது. இறையாடலுக்குப் இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005 51