பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாங்கிப் படியுங்கள் உலக மாவீரன் நெப்போலியன் (வரலாற்றுடநூல்) ஆசிரியர். சு. செளந்தரராசன் (செளந்தர்). - வெளியீடு: அலங்கார் பப்ளிகேஷன்ஸ், 144 (321), என்.எஸ்.கே. சாலை, சென்னை - 600024. பக்கங்கள் 164. விலை ரூ. 55. உலக மாவீரன் நெப்போலியனைப் பற்றிக் ஆ கேள்விப்படாதவர்களே இருக்க முடியாது. 'முடியாது என்பது என் அகராதியில் கிடையாது' என்ற உறுதியை ஊட்டியவர் நெப்போலியன். நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் நெப்போலி யன். தன் துணிவால் முன்னேறியவர். பிரெஞ்சு நாட்டில் பெரும் புரட்சி ஏற்பட்டது. அதற்குப் பிறகு பயங்கர ஆட்சி நடைபெற்றது. குழப்பம் மிகுந்த நாட்டில் அமைதியை எந்டுேத்தி ஐந்தாண்டுகளுக்குப் விறகு அந்த நாட்டின் சக்ரவர்த்தியாக முடிசூட்டிக் கொண்டார். இந்த நூல், மாவீரன். நெப்போலியன் உழைப்பால், உறுதியால், வீரத்தால் படிப்படியாக உயர்ந்த வரலாற்றைச் சொல்கிறது. வாட்டர்லூ என்னுமிடத்தில் நெப்போலியனைத் தோற்கடித்த ஆங்கிலேய நாட்டுத் தளபதி வெல்லிங்டன் பாராட்டுமளவுக்கு வீரம் நிறைந்தவர். வீரர்களை ஊக்கப்படுத்துவதில் சமர்த்தர். அல்லும் பகலும் அயராது உழைத்தவர். பிறரையும் உழைக்கத் தூண்டியவர். ஆங்கில நாட்டுப் பிரதமர் சர்ச்சிலை நெப்போலியனின் வாழ்க்கை மிகவும் கவர்ந்தது. நெப்போலியன் அறிவால் உயர்ந்தவர். அயராத உழைப்பால் உயர்ந்தவர். கட்டுப்பாடான செய்கையால் உயர்ந்தவர். அடிமைப்பட்டிருந்த பிரான்சு நாட்டில் பிறந்த அவர், அதே நாட்டின் சக்ரவர்த்தியாக உயர்ந்ததை மிகச் சுவையாக கதைபோல், படிக்கச் சலிப்பு ஏற்படாமல் எழுதியுள்ளார் நூலாசிரியர். நெப்போலியனின் கடைசி நாள்களைப் பற்றி நூலாசிரியர் எழுதியவை, நெப்போலியன் மீது அதிக மரியாதையை ஏற்படுத்திய தோடு அவர் வீரச் செயல் மீது ஒரு சொட்டு கண்ணிர் விடச் செய்கிறது. - . - இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005 91