பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயல் நிலம் 101

மருத நிலத்து மக்கள் வளம் :

- மருதநிலம், நிலவளம் நீர்வளம் இரண்டால் மட்டும் சிறப்புடையதன்று ; கிலவளமும் நீர்வளமும் வாய்ந்த காட்டில், அவ்விரு வளங்களேயும் பயன்கொண்டு தொழி லாற்றும் மக்கள் வளம் இல்லையேல், அங்கிலநீர்வளங் களால் பயன் இல்லாமற் போகும். ஆகவே, ஆங்குக் குடிவளம் குறைவின்றிப் பெருகுதல் வேண்டும். அவ் வாறே, மருதநிலம், மக்கள் வளத்தாலும் மாண்புற் றிருந்தது. பல்வேறு தொழிலறிந்த மக்களும் ஒன்று கூடி வாழ்ந்தனர் ஆங்கு தொழில் வளத்திற்குத் தொழிலறிந்தார் பலரும் ஒன்று கூடி, வழிவழியாகத், தாம் அறிந்த தொழில்களே வழுவாது மேற்கொண்டு வாழ்தல் இன்றியமையாதது என்பதை அறிந்திருந்தனர். நற்றிணை காட்டு மக்கள். அதல்ை, அவர்கள் ஒவ்வொரு வரும், ஒவ்வொரு தொழில் மேற்கொண்டு வாழ்ந்தனர் , ஒன்றிற்கொன்று துணையாய் அமைந்த அத்தொழில் சகளின் இன்றியமையாமை அறிந்த அக்கால மக்கள், அத்தொழில்களே ஒரு சேர மதித்தனர் ; ஒன்று பெரிது ; பாராட்டற்குரியது . ஏனய சிறிய பழித்தற்குரிய எனப் பாராது, எல்லாத் தொழில்களேயும், அத்தொழில் மேற் கொண்ட எல்லா மக்களேயும் ஒன்றாகவே, ஒத்தவுயர் வுடையராகவே மதித்துப் பாராட்டிப் பெருமை செய்தனர். அதல்ை தமிழ்நாட்டில் தொழில்வளம் செழித்தது.

மருத கிலத்தில், அங்கிலத்தின் தொழிலாய உழவுத் தொழில் மேற்கொண்டு வாழ்ந்த மக்களே பெரும்பகுதியி னராவர். உழவனுக்கு அவன் உழவுத் தொழிலிற்குத் துணைபுரியும் தொழில் புரிந்து வாழ்ந்தார் சிலர். உழவுப் பயன் கொண்டு வாழும் உழவனுக்கு அவன் வாழ்க்கை இனிது நடைபெற, அவன் வாழ்க்கையின் பயனே நன்கு துய்க்கத் துணைபுரியும் தொழில் மேற்கொண்டு வாழ்க்