பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 நற்றிணை

அறிந்த அவர்கள், அவற்றைத் தம் உயிரினும் அருமை யாகப் போற்றி வந்தனர். அவற்றிற்கு நல்ல உணவும், நீரும் நல்கி வளர்த்தனர். அவ்வாறு வளர்த்து அவற்றால் பயன் கொண்ட உழவர், அவை முதுமை யடைந்துவிட்ட போது, அவற்றால் பயனில்லே அவற்றை வைத்துக் காப்பதால் தம் வளத்திற்குக் கேட்ாம் எனக் கருதும் இழிகுணம் அற்றிருந்தனர். எருதுக ளின் உழைப்பால் பெரும்பயன் கொண்ட அவர்கள், அங்கன்றியை மறவாது, முதுமையுற்ற அவற்றை, வயது சென்ற தம் தாய் தந்தை யரைப் பேணிக் காப்பதுபோல், போற்றிக் காத்தனர். வயதான எருதுகள் வைக்கோலேத் தின்ன : ஆகவே, அவற்றின் தேய்ந்த பற்கள் வருந்தாவாறு புல் உணவே அளிக்கவேண்டும் என்பதை அறிந்திருந்தனர் ; புல் லுணவு உண்ணவேண்டிய அவை, அப்புல் கிடைக்கும் இடங்களேத் தாமே தேடிச் சென்று மேய்க என எண்ணி விடாது. புல் கிறைய வளர்ந்திருக்கும் தம்முடைய இள மரச்சோலைகளில் கொண்டு விட்டு, அவை ஆங்குக் கிடைக்கும் புல்லே வேண்டுமளவு மேய்ந்து, அம்மரங்களின் நிழலிற் கிடந்து, தளர்ச்சி போக உறங்கச் செய்து வளர்த்தனர். பல்லாண்டு உழைத்த எருது, ஆண்டு. முதிர்ந்து, நடை தளர்ந்துவிடின், உடனே அடிமாட்டான் பால் விலைபேசி விற்றுவிடும் இக்கால உழவர்களுக்கும், அக்கால உழவர்களுக்கும் இடையே எவ்வளவு வேற். றுமை அவர்கள் அருள் உள்ளம் எங்கே இவர்கள் பொருள் உள்ளம் எங்கே ! * நல்எருது கடைவளம் வைத்தென, உழவர்

புல்லுடைக் காவில் தொழில் விட்டாங்கு.” 1

i. இன் 515இடுவஞ. - — . வைத்தென - ங்ேகியது என்று கருதி, புல்லுடைக்கள் - புல் நிறைந்த மரச்சோலை. தொழில் விட்டாங்கு - தொழில் செய்ய வேண்டாது விட்டதைப்