பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயல் நிலம் 105

மாடு மேய்த்து மீளும் சிறுவர் :

உழவுத் தொழில், ஒருவரே தனித்து மேற்கொள்ளக் கூடிய தொழிலன்று. அதற்குப் பலர் துணை புரிதல் வேண்டும். வீட்டில் உள்ளார் அனேவரும் ஒன்றுபட்டு உழைத்தல் வேண்டும். தந்தையும் தாயும் வயலில் தொழில் செய்யச் சென்றுவிடின், வீட்டிலிருக்கும் சிறுவர் வறிதே விளேயாடி வாழார். கால்நடை வளர்க்கும் முறை களே அறிந்த உழவர், தாம் வளர்க்கும் ஆவும் எருமையும் பாற்பயனேப் பெருக அளித்தல் வேண்டின், அவற்றிற்கு நிறைய புல்லுணவு தருதல் வேண்டும் என்பதையும் தெரிந்திருந்தனர். அதல்ை அவற்றிற்குப் புல்லளித்துப் பேணும் பணியை, உழவர் தம் சிறுவர்கள்பால் ஒப்படைத் திருந்தனர். அச்சிறுவர்களும், கன்றுகளேயும் விட்டிலே விடுத்து, கன்று ஈன்ற எருமைகளேயும் கரிய ஆனிரை களேயும் புல் கிடைக்கும் இடந்தேடி வைகறையிலேயே ஒட்டிச் சென்று மேய்த்து மாலையில் மீள்வர். அவ்வாறு ஒட்டிச் சென்று மேய்ப்பார், நடை மிகுதியால் தம் கால்கள் தளரின், எருமைகள்மீது ஏறி இனிது அமர்ந்து செல்வர். அக்காட்சி ஒன்றை அழகாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார் புலவர் ஒருவர்.

“ மன்ற எருமை மலர்தலேக் கார்ஆன்,

இன் தீம் பால்பயம் கொண்மார் கன்றுவிட்டு ஊர்க்குறு மாக்கள் மேற்கொண்டு கழியும் பெரும்புலர் விடியல்.’ 1

1. நற்றிணை : 80. பூதன்தேவனுர், மன்றம் : மாட்டுத் தொழுவம். மலர்தலை-அகன்ற தலே. கார் ஆன் - கரிய பசு. குறுமாக்கள் - இளைய சிறுவர். மேல் கொண்டு - எருமைமேல் ஏறிக்கொண்டு. கழியும் - செல்லும். புலர்தல் - இருள் நீங்குதல். -