பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகம், முப்பாலும் கடல்கள் குழு, நீண்ட கடற் கரைச் செல்வத்தைப் பெற்றுளது. உலகின் எப்பகுதிக் கும் வாய்க்காத பருவ மழைகளேப் பெறுதற்குத் துணே புரியும் சிறப்புடையது தமிழகத்துக் கடல்கள். மேல்” கடல், கோடையிலும், கீழ்க்கடல் மாரிக்காலத்தும் மழை தந்து, தமிழ்நாட்டு வளத்தை வளர்க்கின்றன. தமிழகத் தின் பெரும் பகுதி கடலே யடுத்திருப்பதால், தமிழ் நாட்டின் பொருள் வளர்ச்சியிலும், அரசியல் புரட்சியிலும், அக்கடல் பெரும் பங்கு கொண்டிருந்தது.

கடல், பல்வேறு வளங்களேயும் வழங்கும் இடமாய் கடல் வாணிகம் வள்ர்க்கும் வழித்துணையாய் விளங்கிற்று. கடற்கரை ஊர்களே வாழ்விடமாகக் கொண்ட மக்கள், கடற்கரையை அடுத்திருந்த நன்செய் கிலங்களை உழுது பயன் கொண்டும், கடல்மேல் சென்று மீன் பிடித்தும், கடல் நீருட் புகுந்து முத்துக் குளித்தும், கடல் நீரைக்

காய்ச்சி உப்புவிளேத்தும் வாழ்ந்தனர்.