பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடல் நிலம் 107

வானம் வேண்டா வளம் :

மழை வழங்கும் வான எதிர் நோக்கி வாழும் குறை வாழ்க்கை, கடற்கரை மக்களுக்கு இல்லை. மழைத்துணே வேண்டாதே வளங்கொழிக்கும் காடு கடற்கரை நாடு ஒன்றே. மழை பெய்தால், கடற்கரை, மரம் செடி கொடிகள் தழைத்து மாண்புறும். மானினம் மந்தை மங்தையாக வந்து உலாவும் வயல்கள், முற்றி வளைந்த பெரிய பெரிய கதிர்களேக் கொண்ட நெற்பயிரால் கிறைந்து நலம் நல்கும். அவ்வளம் உண்டு வாழும் நாங்கள், மழை பெய்யாது பொய்த்துப் போவது கண்டு கலங்கிக் கண்ணிர் விடுவதில்லை. அக்காலத்தில், முள்ளிச் செடியின் உதிர்ந்தமலர்கள் படிந்துகிடக்கும் கழிகளில், கரிய சேறு காய்ந்து போக, அங்கெல்லாம் வெண்ணிற உப்பு தானே விளேயும். விளேயும் அவ்வுப்பை விற்று, உணவும் உடையும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்வேம். இவ்வகையால் மழை பெய்யினும், அது பொய்யாது ஆபொய்ப்பினும் அழியாது வாழும் எம் கடலகத்து ஊர்கள் ஆற்றவும் நன்று “ எனத் தான் பிறந்த ஊரின் பெருமை பாராட்டுகிருள் ஒரு நெய்தல் நில கங்கை. .

‘ பெயினே விடுமான் உழையினம் வெறுப்பத் தோன்றி இருங்கதிர் கெல்லின் யாணர்.அஃதே ; - வறப்பின், மாநீர் முண்டகம் தாஅய்ச் சேறு புலர்ந்து இருங்கழிச் செறுவின் வெள் உப்பு விளையும்; அழியா மரபின் நம்மூதூர் கன்றே.'1 : நாற்புறமும் வரப்புக்கள் நன்கு அமைந்த உப்புப்

பாத்திகளில் கடல் ைேரப் பாய்ச்சி, வெய்யிலின் வெப்பத்

1, நற்றிணை 311. உலோச்சஞர். -

விடுமான்-உலாவும் மான். உழை-மான். வெறுப்பகூட்டமாக. இருங்கதிர்-பெரிய கதிர். யாணர்-புது வருவாய். செறுவில்-வியலில். வறப்பின்-மழை இன்றி வறண்டால். .