பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 - நற்றிணை

தால் வற்றச் செய்து, உப்பு விளேத்து வாழும் வாழ்க்கை உடையேம் ஆதலின், வானம் வழங்கவேண்டும் என அதன் வரவினே எதிர் நோக்கி வாழவேண்டா வளம் வாய்ந்த கடற்கரைக் கண்ணது எம் ஊர் ” எனத் தன் கடற்படு செல்வத்தை வாழ்த்தினுள் மற்றாெரு பெண்.

“ நேர்கண் சிறுதடி நீரின் மாற்றி வானம் வேண்டா உழவின் எம் கானலம் சிறுகுடி.1 - நெய்தல் கிலம், கடல் விள யமுதமாகிய உப்பு, முத்து, மீன் இவற்றால் மட்டும் வளமுடையதாகி விடவில்லை. அது, வணிகப்பெருகிலேயங்களாய் விளங்கினமையினு லேயே, வளம் சிறந்து விளங்கிற்று. தமிழ் காட்டு வணிகர், பிற நாடுகளுக்குக் கொண்டு சென்று விற்கக் கொண்டு வந்து குவிக்கும் பொருள்களாலும், பிறநாட்டு வணிகர், தமிழகத்துப் பேரூர்களில் வாணிகம் புரிதல் கருதித் தம் கலங்களில் கொண்டு வந்து குவிக்கும் பொருள்களாலும், அது வளம் பெற்று விளங்கிற்று. நெய்தல் கிலக் கடற்கரை, பல்வேறு பண்டங்களால் நிறைந்து கண்ணிற்கினிய காட்சி நல்கும் சிறப்புடைத்து. கடல் துறைகள், உலகின் பல்வேறு பகுதிகளினின்றும் போந்த சிறியவும் பெரியவுமாய கலங்களால் நிறைந்து கவினுறத் தோன்றும் ; அக்காட்சிகளைக் கண்டு மகிழ்ந்த புலவர்கள், காற்று இயக்க இயங்கிக் கடலேக் கடந்து வந்த சிறந்த பல வேலைப்பாடு மிகுந்த நாவாய்கள் விற்கும் துறை என்றும், கலங்கள் கொண்டு வந்து. இறக்கிய -16) திறப்பட்ட பண்டங்கள் குவிந்து பரந்த துறை ‘ என்றும் பாராட்டியுள்ளார்கள். . . .

1. நற்றின : 254. உலோச்சனர். - நேர்கண்-பண்பட்ட இடமாகிய, சிறுதடி-சிறிய வயலில், நீர்-கடல்நீர். கானலம் சிறுகுடி-கடற்கரைச் சோலே சூழ்ந்த எம் ஊர். -