பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடல் நிலம் 109

‘ வேறுபல் காட்டின் கால்தர வங்த

பலவினை நாவாய் தோன்றும் பெருங்துறை.'1

‘’ வேறுபல் காட்டின் கால்தர வங்த - பலவுறு பண்ணியம் இழிதரும் கிலவு மணல்,'2

வண்டற்பாவை :

வெண்மணல் பால்போல் பரந்திருக்கும் கடற்கரை : கடலை அடுத்து கவின்மிக்க ஒரு சிற்றுார் ; கண்டல் மரங்கள் வேலிபோல் சூழ்ந்து வளர்ந்திருக்கும் அச் சிற்றுார், செல்வச் செழிப்புடையது ; சிற்றுாரைச் சேர்ந்த சிறுமியர் விலையுயர்ந்த அணிகள் பல அணிந்து ஆடச் செல்வர். கடற்கரையில் புலிநகக் கொன்றை மரத்தின் நிழல் பரந்த இடமே அவர்கள் ஆடிடம் , சின்னம்சிறு பூக்களேயுடையது அப் புலிநகக் கொன்றை , மலர் சிறிதே யாயினும் அது பெற்றிருக்கும் தேனே பெரிது. அதன் நிறமோ கண்டார் கண்ணேப் பறிக்கும் பேரொளி *வாய்ந்தது. அழகிய அம் மரத்தடியில் ஆடி மகிழும் மகளிர், அங்கே மணல்வீடு கட்டி, அவ்விட்டின் நடுவே அழகிய மண்பாவை பண்ணி மகிழ்வர். மகளிர் இழைத்த மண்பாவை மீது, அப்புலிநகக்கொன்றை தன் பொன்னிற மகரந்தப் பொடிகளேத் துாவிப் பேரழகு செய்யும். மகரந்தம் படிந்த அம் மண்பாவை, பொன்னிறத் தேமல்களால் பொலிவுற்ற மேனியையுடையாளொரு பெண் போல் தோன்றிப் பேரின்பக் காட்சி நல்கும். அத்தகைய அழகிய காட்சிகளே உடையது அந் நெய்தல் நிலம். -

1. நற்றிணை 295, ஒளவையார், - கால-காற்று. தர-கொண்டு வர. நாவாய்-கப்பல்கள். 2. கற்றிணை :31. நக்கீரர்.

பண்ணியம்-பண்டங்கள், பலவுறு-பலவகைப்பட்ட