பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 நற்றிணை

சிறுவி ஞாழல் தேன்தோய் ஒள்ளினர், கேரிழை மகளிர் வார்மணல் இழைத்த வண்டல் பாவை வனமுலே முற்றத்து ஒண்பொறிச் சுணங்கின் ஐதுபடத் தாஅம் கண்டல் வேலிக் காமர் சிறுகுடி.'1 நாரை விலக்கிய நண்டு வண்டுப் போர் :

அலே அலேக்கும் கடற்கரை ; அக்கரையில் ஒரு கரு நாவல் மரம்; தொட்டால் ஒடிந்துவிடும் மெல்லிய கிளேகளே யுடையது அம்மரம். அக்கிளேயில் காய்த்த கரிய கனி யொன்று காம்பற்றுக் கீழே உதிர்ந்தது. கறுத்துச் சதைப் பற்றுக்கொண்டு பருத்த அக்கனியைக் கண்ட சில கருவண்டிகள், அதைத் தம் இனமாகக் கருதி, அதன் பால் விரைந்து பரந்தன ; அந்நிலையில் அம்மரத்தின் வேரிடையே வாழும் கண்டு ஒன்றும் அக்கனியைக் கண்டு விட்டது; நாவல்கனியுண்டு பழகிய அது, வண்டுகள் வந்தடைதற்கு முன்னரே, அக்கனியைத் தன் கூரிய கொடுக்குகளால் பற்றிக் கொண்டது ; அதைக் கண்ட” வண்டுகள், தம் இனத்து வண்டொன்று கண்டின் கால் களில் சிக்குண்டதாகக் கருதின ; தன் இனம் ஒன்றை இழக்கமனமின்றி வருந்தின. அதனுல், அதை விடு விக்கும் வண்ணம் கண்டைச் சூழ்ந்து சூழ்ந்து பறந்தன. அவை எத்தனே கூடிவந்து, எத்தனே நேரம் சூழ்ந்து திரியினும், கண்டு அக்கனியைக் கைவிட்டிலது. அதல்ை வண்டுகளின் ஆரவாரம் பெரிதாயிற்று இம் ‘ என்ற இரைச்சல் எழுந்து விட்டது.

1. நற்றிணை : 191. உலோச்சஞர். - வி-மலர். ஞாழல்-புலிநகக் கொன்றை, தேன்தோய்-தேன் நிறைந்த, ஒள்இணர்-ஒளிவிடும் மலர்க்கொத்து. கேர்இழை-அழகிய அணிகள், வண்டல் பாவை-மண் பொம்மை. சுணங்கின்-தேமல்கள் போல். ஐதுபடமெல்லிதாகப் படுமாறு. தாஅம்-பரவும். -