பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடல் நிலம் 111

இப்போர் நிகழ்ந்துகொண்டிருக்கும்பொழுது, அது கிகழும் இடத்திற்கு அணித்தாக நாரை ஒன்று மீன் தேடித் திரிந்துகொண்டிருந்தது. வண்டுகள் எழுப்பிய ஆரவாரப் பேரொலி நாரையின் கருத்தைக் கவர்ந்தது. ஒலிவந்த திசையை உற்று நோக்கிற்று நாரை ; ஆங்கு நிகழும் நிகழ்ச்சியைக் கண்ட காரை, ஆங்கு நிகழ்வதை விளங்க அறிந்துகொள்ளும் ஆர்வம் பெருக, அவ்விடம் கோக்கி விரைந்து சென்றது. நாரைவரக் கண்ட வண்டுகள், கண்டைவிடுத்துப் பறந்தோடின : கண்டும் நாவற்கனியைக் கைவிட்டு, வளேக்குள் ஒடி மறைந்தது. கண்டிற்கும் வண்டிற்கும் கிகழ்ந்த போர், நாரையால் முடிவுற்ற அக்காட்சியைக் கண்டு களித்தார் ஒரு தமிழ் அன்பர்.

‘ பொங்கு திரை பொருத வார்மணல் அடைகரைப்

புன்கால் காவல் பொதிப்புற இருங்கனி கிண்செத்து மொய்த்த தும்பி, பழம் செத்துப் பல்கால் அலவன் கொண்ட கோள் கூர்ந்து கொள்ளா நரம்பின் இமிரும் பூசல் இரைதேர் காரை எய்திய விடுக்கும் ‘ 1

காதல் மிகுந்த கடல் காக்கை :

பேடும் சேவலுமாகப் பிரியாது வாழ்ந்திருந்தன. இரு கடற் காக்கைகள் ; பேடு சூலுற்றிருந்தது. சூல், கிரம்பிய தாதலின், அதனுல் சிறிது தூரம் பறப்பதும் இயலாதா யிற்று. அதன் கிலே கண்டு வருந்திய காக்கைக் சேவல்

1. நற்றிணை : 35. அம்மூவஞர். . . . .

பொருத-மோதிய. புன்கால்-மெல்லிய Th. பொதிப்புற இருங் கனி-சதைப்பற்று மிகுந்த கரிய பழம். கிளை செத்து-இனமாகக் கருதி, பழம் செத்து-பழமாகக் கருதி. கோள் கூர்ந்து-விலக்கி. நரம்பின் இமிரும். யாழோசை போல் ஒலி எழுப்பும். பூசல்-ஆரவாரப்போர்.