பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 நற்றிணை

காலேயில் கடற்கரைக்கு வந்து, கடலில் நீராடி நோன்பு நோற்கும் மகளிர், கரையில் படர்ந்திருக்கும் . அகும்பங் கொடிகளே இடையிடையே விலக்கி, இருந்து, வழிபாடாற்றி விட்டுச்சென்ற வெற்றிடங்கள் ஒன்றில், பறந்து இரைதேடாமாட்டாத் தன்பேட்டினே விடுத்து, இரை தேடிச் சென்றது. கழியின் கரிய சேற்றில் வளரும் அயிரை மீனச் சூலுற்ற பேடு பெரிதும் விரும்பி உண்ணும். தன்பேட்டினுக்கு, அது விரும்பும் உணவளிக்க ஆசைப்பட்ட காக்கைச் சேவல், தெளிந்த நீர் தேங்கிக் கிடக்கும் அக்கழியின் ஆழமான இடத்தே சென்று: ஆங்குப் படிந்திருக்கும் மலர்களே அகற்றிவிட்டுத் தன் காலாலும் அலகாலும் துழாவித் துழாவி அயிரை மீனத் தேடி அலையும். அக்காட்சியை அகம் குளிரக் கண்டு மகிழ்ந்தார் ஒரு புலவர்.

‘ கடலம் காக்கைக் செவ்வாய்ச் சேவல்

படிவ மகளிர் கொடி கொய்து அழித்த பொம்மல் அடும்பின் வெண்மணல் ஒரு சிறைக் கடுஞ்சூல் வதிந்த காமர் பேடைக்கு இருஞ் சேற்று அயிரை தேரிய தெண்கழிப் பூவுடைக் குட்டம் துழவும்.’ 1 பரந்த கடல் : கன்னங்கரேல் எனக் கறுத்து நிறைந்த நீர் அக்கடலே அடுத்திருந்த ஒரு கழி ; பரந்திருந்த அக் கழியில் குளிர்ந்து தெளிந்து தேங்கிக் கிடக்கும் நீர் அக் கடல் நீருள் புகுந்து இரைதேட எண்ணிய ஒரு காக்கைச் சேவல், இரைகாணுமளவு கடல் நீர் தெளியாமை கண்டு, கழி நீர் நோக்கிப் பறந்ததையும், கழி அடைந்து அக் கீரை - 1. pp%r 878, pger ` . - படிவமகளிர் - நோன்பு நோற்கும் மகளிர். பொம்மல் - அடர்ந்து வளர்ந்த கடுஞ்சூல்-நிறைந்த சூல். காமர்-தான் விரும்பும். இரும்-கரிய, தேரிய-தேடுதற் பொருட்டு. குட்டம்-ஆழமான இடம்.