பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடல் கிலம் 118

நீண்ட நேரம் துழாவித் துழாவித் திரிந்ததையும், இறுதியில் தன் அலகில், செந்நிற இருல் மீன் அகப்பட அகம் மகிழ்ந்து, கரை கண் இருக்கும் தன் காதற் பேட்டினேக் கூவியவாறே அதன்பால் பறந்து வந்து, வருந்தித்தான்பெற்ற இருல்மீன் உணவை, அதன் வாயில் இட்டு மகிழ்ந்ததையும் கண்குளிரக் கண்டு மகிழ்ந்தார் மற்றாெரு புலவர்.

மாஇரும் பரப்பகம் துணிய கோக்கிச் சேய் இரு எறிந்த சிறுவெண் காக்கை பாய் இரும் பனிக்கழி துழைஇப் பைங்கால் தான் வீழ் பெடைக்குப் பயிரிடு உச் சுரக்கும்.” 2

நாரைக் கூட்டம் :

நீர் கிலேகளே அடுத்து வாழும் பறவை இனங்களில், பெரியது காரை இனம் : நீண்ட காலும், பருத்த உடலும், வெண்ணிறத் தூவியும் பெற்றது நாரை, நீர் நிலைக்கண் கூட்டங் கூட்டமாய்க் கூடிவாழும் இயல்புடையன நாரைகள். நீர் கிலே இருக்கும் இடமெங்கும், காரைகள் காணப்படும் என்றாலும், கடற்கரைக்கண் அவை காணப் படும் காட்சி மிகவும் அழகுடையதாம்.

கடல் கொந்தளித்துப் பொங்கி எழும் பொழுது, கழியுள் ஏறும் கடல் நீர், கொந்தளிப்பு அடங்கியதும் மீண்டும் கடலுள் புகுந்து விடும். புகுந்த கடல் நீர், மீண்டு போய்விடின், கழி சேருக மாறிக் காட்சியளிக்கும் கழிநீரில் ந்ேதிவாழும் மீனினங்கள், நீர் அற்றுப் போயின் சேற்றில் சிக்கிச் செயலற்றுப் போகும். அம்மீன்களைத்

2. நற்றினே : 31. நக்கீரர். - - - மா - பெரிய துணிய - தெளிய. எறிந்த - பற்றிய வீழ்-விரும்பும். பயிரிடு .க.வி அழைத்து, சுரக்கும்-ஊட்டும். -