பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

j.14 நற்றிணை

தேடித்தின்று உயிர் வாழும் நாரைகள். அத்தகைய கிலே, நாரைகள் கினேத்தவுடனே நேர்ந்து விடுவதில்லை. அங்கிலையை எதிர் நோக்கி, நாரைகள், கழிநீரின் கரைக் கண் உள்ள மணல் மேட்டில் கூட்டம் கூட்டமாய்க் காத்துக் கிடக்கும். வெண்ணிறத் தூவிவிளங்க, வரிசை வரிசையாய் வீற்றிருக்கும் நாரைகளின் அத்தோற்றம், அரசர்களின் படைகள், கையில் ஏந்திய படைக்கலங்கள் ஒளிவிட, கடற்கரைக்கண் பாடிகொண்டிருக்கும் கர்ட்சியை கினேப்பூட்டிக் கழி பேரின்பம் தரும்.

“ நீர்பெயர்ந்து மாறிய செறிசேற்றுஅள்ளல்

கெய்த்தலைக் கொழுமீன் அருங்த, இனக்குருகு குப்பை வெண்மணல் ஏறி, அரைசர் ஒண்படைத் தொகுதியின் இலங்கித் தோன்றும்.’

நாரைக் காதல் :

கடற் கரையை அடுத்த ஒரு சிற்றுார் ; உப்பிட்டு உலர்த்திக் கிடக்கும் மீனின்முடை காற்றம் மூக்கைத் துளேக்கும் அவ்வூரின் நடுவே ஒரு பனமரம். அடிக்கும் கடற் காற்றிற் கேற்றவாறு அசைந்து கொடுக்கும் அப் பனைமரத்து மடலில் கூடு கட்டி வாழ்ந்தன சேவலும் பேடுமாகிய இரு நாரைகள். ஒருநாள், பேடு கூட்டில் தனித்திருக்க, சேவல் இரைதேடி வெளியே சென்றது. கடலையொட்டி ஒடிய கழிைேரத் துழாவித் துழாவி, மீன்களைப் பிடித்து வயிருர உண்டு மகிழ்ந்தது. மாலை வந்தது. பேட்டின் கினேவு வரவே, கூட்டை நோக்கி

1. நற்றிணை : 291. கபிலர்.

செறி சேறு-மிக்க சேறு. அள்ளல்-சேறு. நெய்த்தலை-தலையில் நெய்ப்பசை மிக்க கொழுமீன்-கொழுத்த மீன். குருகு-நாரை, குப்பை வெண்மணல்-குவியல் குவியலான மணல் மேடுகள், ஒண் புடை-ஒளி விடும்படை இலங்கி-விளங்கி.