பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 - நற்றிணை

தோகை. தன் தோகையின் அழகில் மயங்கிவிட்ட அப்பேட்டினேச் சேவலும் காதலித்தது, அதன்பால் இன்பமும் நுகர்ந்தது. அவ்வின்ப உணர்வால், பேடு தன்னே மறந்திருக்கும்பொழுது, நன்றிகெட்ட அங்காரைச் சேவல் அதை விடுத்து ஒடிவிட்டது. பேடு உணர்வு வந்து நோக்கியபொழுது சேவலேக் காணுமையால் கலக்கம் கொண்டது. இன்பம் தந்த சேவலை இழந்து விட்ட வருத்தம் ஒருபால், அதுகாரும் இழக்காதிருந்த தன் கற்பை இழந்து விட்ட வருத்தம் ஒருபால் என வருத்த மேல் வருத்தமாய் வந்து வாட்டின. அவ்வருத்த மிகுதியால் உணவுண்ணும் கினைப்பையும் இழந்துவிட்டது. கழிக்குச் சென்று மீன் தேடி உண்பதை விடுத்தது. ஆங்குத் தழைத்து வளர்ந்திருந்த தாழை மரத்தின் கிளே யொன்றில், வருந்தி உள்ளம் சோர்ந்து, வாடிக் கிடந்தது.

“ ஆடு.அமை ஆக்கம் ஐது பிசைங்தன்ன தோடு.அமை துரவித் தடங்தாள் காரை கலன் உணப்பட்ட கல்சுடர் பேடை கழிபெயர் மருங்கில் சிறுமீன் உண்ணுது கைதையப் படுகினம் புலம்பொடு வதியும்.” 1 பேடும் சேவலுமாக இரு நாரைகள் வாழ்ந்திருந்தன. அவற்றின் காதல் வாழ்க்கை இனிதே கழிந்து கொண்டி ருந்தது. அங்கிலேயில் பேடு சூலுற்றது. சூலும் வளர்ந்தது. பேட்டில்ை பறப்பதும் இயலாதாயிற்று. அதல்ை, அது இரைதேடிச் செல்வதை விடுத்தது. கடம் கரைச் சோலவரை செல்வதற்கும் அதஞல் இயல

1, நற்றிணை 178. . - | - ஆடு அமை - அசையும் மூங்கல் ஆக்கம் - உள்ளே உள்ள வுெண்ணிறத் தோல். ஐது-மெல்லிதாக தோடு-இறகு. தூவி-தோகை, நல்கூர்-இன்பம் இந்த கற்பை இழந்த, கைதை-தாழையின், அம். அழகிய படுகின-பெரிய கிளை. புலம்பு-துன்பம். . .