பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 நற்றிணை

தேடி உண்ணும். அவை மீன் தேடிச் சென்றிருப்புழி, கூட்டில் இருக்கும் குஞ்சு, தன் தாயை கினேந்து ஓயாது அழைக்கும். பிள்ளேயின் அழைப்புக் குரல் கேட்டு ஆர்வம் கொள்ளும் அங்காரைகள், இரை தேடுங்கால், சிவந்த கண்ணும், சின்னஞ்சிறு உடலும் வாய்ந்த பொடிமீன்

அகப்படின், அம்மீன, உடனே எடுத்தோடிச் சென்று, ஓயாது அழைக்கும் அக்குஞ்சின் வாயில் இட்டு மகிழும்,

‘’ புன்னே பூத்த இன்கிழல் உயர்கரைப்

பாடுஇமிழ் பனிக்கடல் துழைஇப் பெடையோடு உடங்கு இரைதேரும் தடங்தாள் காரை ஐய சிறுகண் செங்கடைச் சிறுமீன் மேக்குஉயர் சினையின் மீமிசைக் குடம்பைத் தாய்ப்பயிர் பிள்ளை வாய்ப்படச் சொரியும்,1

மலர் கண்டு மருளும் மீன் :

கடல்நீர் பாயும் உப்புப் பாத்தியில் வாழ்ந்திருந்தது ஒர் இருல் மீன். வ8ளந்த முதுகும், அகன்ற வாயும், உடைய அம்மீனே அப் பாத்தியை அடுத்து ஒடிய கழியில் மீன்தேடித் திரிந்திருந்த நாரை ஒன்று பார்த்து விட்டது. உடனே அம்மீனப் பாய்ந்து குத்திற்று ஆணுல், மீன், அதன் குத்திற்குத் தப்பிவிட்டது பிழைத்த மீன், உப்புப் பாத்தியிலே இருப்பின் ஏதாம் என எண்ணிக் கடல் நீருட்புகுந்து மறைந்தது. கடல் நீருட்புகுந்த அது, பெரு நீரில் நெடிது வாழமாட்டாமையால் கரை நோக்கி வந்தது. கரையில், அலே கொண்டுவந்து குவித்த மணல் மேட்டில், பேய்போல் தலே விரித்துத் தாழ்ந்த மடல்களேயுடைய

1. நற்றிணை : 91. பிதிராந்தையார். - . . . . . . . பாடு-அலஓசை. இமிழ்-ஒயாது ஒலிக்கும். பனிக்கடல்-குளிர்ந்த கடல். உடங்கு-ஒன்றுகூடி. தேரும்-தேடும். ஐய-மெல்லிய. மேக்கு உயர்-மேலே உயர்ந்த, மீமிசை-மேலே. குடம்புை-கூடு. பயிர்-அழைக்கும்.