பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

@l- 119

தாழைமரம் ஒன்று தழைத்திருந்தது. அத் தழையின் கிளேயொன்று கடல்நீரில் படுமாறு தாழ்ந்திருக்தது. தாழ்ந்திருந்த அக்கிளேயில் இதழ்விரியாது மலர்ந் திருந்தது ஒரு வெண்தாழைமலர். அம்மலர், மீனின் கண்ணிற் பட்டுவிட்டது. நிறத்தாலும் உருவாலும் நாரை போல் தோன்றிற்று. அம்மலர் காரையின் குத்துக்குப் பிழைத்து வந்த அம்மீன், அம்மலரை நாரை என்றே எண்ணிவிட்டது, அதனல், அம்மலருக்கு அஞ்சி அவ் விடம் விட்டு ஒடி ஒளிந்துகொண்டது.

ஒதம் சென்ற உப்புடைச் செறுவில் கொடுங்கழி மருங்கின் இரைவேட் டெழுந்த கருங்கால் குருகின் கோள் உய்ந்து போகிய முடங்கு புற இறவின் மோவாய் ஏற்றை எறிதிரை தொகுத்த எக்கர் நெடுங் கோட்டுத் துறுகடல் தலைய தோடுபொதி தாழை வண்டுபடு வான்போது வெருஉம்.1

‘பரதவர் வாழ்க்கை: -

மக்கள் வாழ்க்கை, சூழ்நிலைக்கு ஏற்ப அமையும் என்பது, உலகியல் உணர்த்தும் உண்மை; அவர் உணவு, உடை, உறையுள் ஆகியனவும், அச் சூழ்கிலேக்கு ஏற்பவே அமையும். கடற்பகுதியில் வாழும் மக்கள், தம் வாழ்க் கைக்கு அக்கடலின் துணையையே பெரிதும் எதிர்நோக்கி வாழ்வர். தமிழ்நாட்டுக் கடற்கரைகளில் வாழ்ந்த

1. கற்றிணை : 211. கோட்டி பூர் நல்லந்தையார். - ஒதம்-கடல்நீர். செற்-பாத்தி. கொடுங்கழி-வளைந்து வளைந்து செல் லும் உப்பங்கழி. கோள்-குத்து. உய்ந்துபோகிய-பிழைத்து ஓடிய, முடங்கு புறம்-வளைந்த முதுகு, மோவாய்-பெரிய வாய். எக்கர்-மணல்மேடு. நெடுங்கோடு-நீண்ட கடற்கரை. துறுகடல் தலை-நெருங்கிய கடற்கரைக்கண் உள்ள, தோடு-இதழ். பொதி-மூடியிருக்கும். போது-அரும்பு, வெருஉம்மருளும். -