பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 நற்றிணை

தமிழர்கள், கடலில் கலம் செலுத்தவும், கடலின் இயல் பறிந்து கடல்மேல் சென்று மீன் பிடித்து வாழவும் வல்லராய் வாழ்ந்தனர். தமிழகத்து மலைக்காடுகளில் வாழ்ந்தாரைக் குறவர் என்றும், குறுங்காடுகளில் வாழ்ந் தாரை ஆயர் என்றும், வயல்வெளிகளில் வாழ்ந்தாரை உழவர் என்றும் பெயரிட்டு அழைத்த அக் காலத்தார், கடற்கரைவாழ் மக்களைப் பரதவர் எனும் பெயரிட்டு அழைத்தனர். பரதவர் மேற்கொண்டு வாழ்ந்த மின் பிடித்தல் தொழில், உறுதியும் ஊக்கமும், உள்ளத் தெளிவும் ஒருங்கே உடையார் மட்டுமே மேற்கொள்ளத் தக்க பெரும் தொழிலாகும். அத் தொழிலில் கரைகண்டு சிறப்புற்றிருந்தனர் சங்ககாலத் தமிழ்ப் பரதவர்.

பருவம் நோக்கும் பர தவன் :

- கடற்கரையை அடுத்திருந்த ஒரு சோலேயின் இடை யிடையே சிறுசிறு வீடு கட்டி வாழ்ந்திருந்தனர் சில பரதவர். அப்பரதவர் கலம் செலுத்தியோ, முத்துக் குளித்தோ, உப்புக் காய்ச்சியோ வாழ்பவரல்லர் , மின் பிடித்து வாழ்தலை வாழ்வின் தொழிலாக மேற்கொண் டவர். மீன் பிடித்தல் தொழில், கினேத்தபோதெல்லாம் மேற்கொள்ளும் தொழிலன்று. கடல்மேற் சென்று நித்தற்கேற்ற பருவம் வாய்த்த விடத்து மட்டுமே மேம் கொள்ளலாகும் தொழில் அது. அதல்ை, அச்சிறு குடி. வாழும் பரதவர் பொழுது புலர்ந்ததும், தம் வலைகளே வாரி எடுத்துக்கொண்டு கடற்கரைக்குச் செல்வர். ஆங்கு

புன்னமரங்களின் நிழலில் அமர்ந்து, கடலை நோக்குவர்.

கடல் கொந்தளித்தலோ காற்றுச் சுழன்றடித்தல்ோ இன்றிக் கடல் அமைதியடையும் அந்நிலையை எதிர் நோக்கி விருப்பர். அவ்வாறு காத்திருக்கும் அவர்கள், துறுை பொழுதிலும் வாளா இராது. மீன் வல்கள்

j